சென்னை,ஜூன் 24- தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் ஜூன் 28 முதல் ஜூலை 30 ஆம் தேதி வரை 23 நாட்கள் நடத்த அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் கடந்த பிப்ர வரி மாதம் 8 ஆம் தேதி 2019 -20 ஆம் ஆண்டுக் கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு நிறை வேற்றப்பட்டது. இதையடுத்து மக்களவைத் தேர்தலையொட்டி மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறாமலேயே பேரவை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டது. மக்களவை தேர்தல் முடிந்த நிலையில், துறை வாரியாக மானியக் கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு நிதி ஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் பெறுவதற்காக, சட்டப்பேரவை கூட்டத் தொடர் வரும் 28 ஆம் தேதி தொடங்கு கிறது. இந்நிலையில், பேரவைத் தலைவர் தனபால் தலைமையில், சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள், எதிர்க்கட்சி துணைத் தலை வர் துரைமுருகன், திமுக கொறடா சக்கர பாணி, சட்டமன்ற காங். தலைவர் ராமசாமி, விஜயதாரணி, ஐயூஎம்எல் எம்எல்ஏ அபுபக்கர் ஆகியோரும் பங்கேற்றனர். அதில் சட்டப்பேரவை கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது, எந்தெந்த துறை மானியக் கோரிக்கைகளை எந்த நாளில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்வது, கட்சிகளின் உறுப்பினர்கள் பேசும் நேரம், கவன ஈர்ப்பு, சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மா னங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்தின் முடிவில் சட்டப் பேரவை கூட்டத் தொடர் ஜூன் 28 முதல் ஜூலை 30 ஆம் தேதி வரை நடத்தப்படும் என பேரவைத் தலை வர் தனபால் அறிவித்தார். பேரவைத் தலைவர் தனபால் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர திமுக கடிதம் கொடுத்துள்ளதால் சட்டசபை கூடியதும் முதல் நிகழ்வாக பேரவைத் தலை வர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் எடுத்துக் கொள்ளப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது. ஜூன் 28 ஆம் தேதி காலை சட்டமன்றம் கூடி யதும் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் இந்த பேரவையின் உறுப்பினர்க ளான மறைந்த ஆர். கனகராஜ் (அதிமுக), கு. ராதாமணி (திமுக) ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அன்றைய தினம் கூட்டம் ஒத்திவைக்கப்படுகிறது. இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பிறகு மீண்டும் சட்டமன்றம் கூடுகிறது. அன்றைய தினத்திலிருந்து மானி யக்கோரிக்கைகள் மீதான உறுப்பினர்களின் விவாதமும் அமைச்சர்களின் பதிலுரையும் இடம்பெறுகிறது. ஜூலை 1 ஆம் தேதி வனம், சுற்றுச்சூழல் துறைகள், ஜூலை 2 பள்ளிக் கல்வி, உயர் கல்வி, ஜூலை 3 கூட்டுறவு, உணவு, ஜூலை 4 மின்சாரம், மதுவிலக்கு, ஜூலை 5 மீன் வளம், பணியாளர் சீர்த்திருத்தம், கால் நடை, பால் வளம். ஜூலை 8 உள்ளாட்சித்துறை, சிறப்பு திட்ட செயலாக்கம், ஜூலை 9 நீதி நிருவாகம், சிறைச்சாலை, சட்டம், ஜூலை 10 சமூக நலம்-சத்துணவு, மாற்றுத்திறனாளிகள், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்ப டுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், ஜூலை 11 தொழில்துறை, ஜூலை 12 கைத்தறி, செய்தி, விளம்பரம், ஜூலை 15 நெடுஞ்சாலை-பாசனம், பொதுப்பணி, ஜூலை 16 மக்கள் நல்வாழ்வு, ஜூலை 17 வேளாண்மை, ஜூலை 18 சுற்றுலா- கலை பண்பாடு, இந்து சமயம் அறநிலையம், ஜூலை 19 வருவாய்த்துறை, ஜூலை 22 காவல், தீயணைப்பு, உள்துறை, ஜூலை 23 முதலமைச்சர் பதிலுரை, வணிகவரிகள்-முத்திரைத்தாள்கள், தகவல் தொழில் நுட்பவியல், ஜூலை 24 தொழிலாளர் நலன்- வேலைவாய்ப்புத்துறை, தமிழ் வளர்ச்சி, ஜூலை 25 போக்குவரத்துத் துறை, ஜூலை 26 ஆதிதிராவிடர்-பழங்குடியினர், கதர் கிராமத் தொழில்கள், ஜூலை 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் பொதுத்துறை, மாநிலச் சட்டமன்றம், ஆளுநர்-அமைச்சரவை, நிதித்துறை, வீட்டு வசதி, திட்டம் வளர்ச்சி, ஓய்வூதியங்களும் ஏனைய ஓய்வுக்கால நன்மைகளும்.