சென்னை:
பண்டிகைக் காலம் நெருங்குகிறது. அக்டோபர் மாதம் பிறந்துவிட்டாலே பண்டிகை மாதம்தான். கொண்டாட்ட மாதம்தான்.அக்டோபர் மாதத்தில்தான் நவராத்திரி பண்டிகையும், தீபாவளியும் வருகிறது.இந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் வங்கிகள் சுமார் 11 நாட்களுக்கு விடுமுறையில் இருக்கும். அதில் மிகக் குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால் அக்டோபர் 26 முதல் அக்டோபர் 29 வரையில் தொடர்ந்து 4 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட உள்ளது. இந்த நான்கு நாட்கள் விடுமுறை தொடர்ந்து வருவதால், பணம் எடுப்பது, பெட்டகங்களைப் பயன்படுத்துவது போன்ற வேலைகள் இருந்தால் முன்கூட்டியே செய்து கொள்ளுங்கள். இடர்பாடுகளைத் தவிருங்கள். வங்கிப் பணிகள் இருந்தால் அதற்கேற்ப திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.
மத்திய அரசால் அறிவிக்கப்படும் விடுமுறைகள் தனியார் மற்றும் பொதுத் துறை வங்கிகளுக்கு பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதே சமயம், விடுமுறை நாள் வேண்டுமென்றால் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடலாம்.