tamilnadu

img

நிவாரணம் கேட்டு கைத்தறி நெசவாளர்கள் இன்று கோரிக்கை ஆர்ப்பாட்டம்

சென்னை:
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கைத்தறி நெசவுத் தொழில் கடந்த ஆறு மாத காலமாக முடங்கியிருக்கிறது. கூட்டுறவுச் சங்கங்களில் தனியார் நிறுவனங்களில் துணிகள் விற்பனை இல்லாமல் தேங்கி கிடக்கிறது.இதனால் நெசவாளர்களுக்கு வேலை இல்லை. வருமானம் இல்லை. வேலை இல்லாத இந்த காலத்தில் தமிழக அரசு அறிவித்த நெசவாளர்களுக்கான  2000 ரூபாய் நிவாரணம் பல்வேறு நிபந்தனைகள் காரணமாக  பெரும்பாலான நெசவாளர்களுக்கு கிடைக்கவில்லை.1மேலும், தொற்று பாதிக்கும் சாதாரண நெசவாளர்கள் ஆபத் தான நிலையில் உயர் மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் பெரும்  பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.

இந்தப் பின்னணியில், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் தறி உடமை யாளர்களிடம் தேங்கியுள்ள துணிகளை உரிய விலைக்கு தமிழக அரசு கொள்முதல் செய்ய வேண்டும். அதற்குரிய பணத்தை உடனே வழங்க வேண்டும். நெசவாளர்களுக்கு தொடர்ந்து வேலை வாய்ப்பு கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.வேலையில்லா காலத்தில் தமிழக முதல்வர் அறிவித்த கைத்தறி 2000 ரூபாய் நிவாரணம் நிபந்தனையின்றி அனைவருக்கும் கிடைக்க அரசு புதிய உத்தரவை உடனே வெளியிட வேண்டும். நிவாரண தொகை ரூ.7500 மாக உயர்த்த வேண்டும்.கொரோனா தொற்றால் பாதிக்கும் நெசவாளர்கள் உயிரை பாதுகாக்க உயர்ந்த மருத்துவ சிகிச்சை கிடைத்திட ரூ.5 லட்சத் திற்கு கொரொனா சிறப்பு மருத்துவ காப்பீடு திட்டத்தை அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் திங்களன்று (ஆக.10) தனி மனித இடை வெளியுடன் கைத்தறி நெசவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுமாறு தமிழ்நாடு கைத்தறி நெசவுத் தொழிலாளர் சம்மேளனம் (சிஐடியு) மாநில பொதுச் செயலாளர் இ‌.முத்துகுமார் கேட்டுக்கொண்டுள்ளார்.