சென்னையில் கிண்டி கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனை மருத்துவர் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து அரசு மருத்துவர்கள் சங்கம் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் அறிவித்த நிலையில், அரசுடனான பேச்சு வார்த்தைக்கு பிறகு போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில், பணியில் இருந்த புற்றுநோய் பிரிவு மருத்துவர் பாலாஜி ஜெகன்நாதனை கத்தியால் குத்திய விக்னேஷ் மற்றும் அவருக்கு உதவிய நபர் ஒருவர் என 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த நிலையில், மருத்துவர் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து அரசு மருத்துவர்கள் சங்கம் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் அறிவித்தனர். தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவ கல்லூரிகளில் அவசரகால சிகிச்சை, உயிர் பாதுகாப்பு சிகிச்சை தவிர்த்து மற்ற பணிகளை மருத்துவர்கள் புறக்கணிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து, அரசுடனான பேச்சு வார்த்தைக்கு பிறகு போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.