tamilnadu

img

மீனவர்களின் பொதுச் சொத்துக்களை பாதுகாக்க மீனவர் அமைப்புகள் வலியுறுத்தல்

மீனவர்களின் பொதுச் சொத்துக்களை பாதுகாக்க  மீனவர் அமைப்புகள் வலியுறுத்தல்

புதுச்சேரி, ஜூலை 18 மீனவர்களின் பொது சொத்துக்களை பாது காக்க வேண்டும் என்று புதுச்சேரி அரசை அரசியல் கட்சிகள் மற்றும் மீனவர் அமைப்புகள் வலியுறு த்தியுள்ளன. தமிழ் மீனவர் விடுதலை வேங்கைகளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து “மீனவ கிராமங் களும் அதன் பொதுச் சொத்துக்களும்” என்ற கையேடு வெளியீடு மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி புதுவை தமிழ்ச் சங்கத்தில் வெள்ளிக்கிழமை (ஜூலை 18) நடைபெற்றது. இந்நிகழ் ்ச்சிக்கு தமிழ் மீனவர் விடு தலை வேங்கைகளின் நிறு வனர் இரா. மங்கையர் செல்வன் தலைமை தாங்கி னார். சிபிஎம் மாநிலச் செய லாளர் எஸ். ராமச்சந்திரன் உரையாற்றினார். புதுச்சேரி மக்களவை உறுப்பினர் காங்கிரஸ் கட்சியின் தலை வருமான வெ. வைத்திய லிங்கம், திமுக புதுச்சேரி மாநில அமைப்பாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சிவா ஆகியோர் இணைந்து கையேட்டை வெளியிட்ட னர். கடலோர ஒழுங்குமுறை மண்டல அறிவிப்பாணை 2019 மற்றும் புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்க ளுக்கான அக்டோபர் 202 இல் வெளிவந்த வரைவு கடற் கரை மண்டல மேலாண்மை திட்டங்கள் மீனவர்களை பாதிப்புக்கு உள்ளாக்கு வதை வெளிப்படுத்தும் கையேட்டை அனைத்து மீனவ கிராமப் பஞ்சாயத்து தலைவர்களும் பெற்றுக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பாரம் பரிய மீனவ பஞ்சாயத் துகளின் பிரதிநிதிகள், சிபிஐ மாநில நிர்வாகி சுப்பையா, சிபிஐ(எம்எல்) மாநிலச் செயலாளர் புருஷோத்த மன், விசிக மாநில அமைப்பா ளர் தேவ. பொழிலன் மற்றும் பல்வேறு சமூக அமைப்பு கள், மீனவ பஞ்சாயத்து நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மீனவர்களின் பொது சொத்துக்களை முழுமை யாக கடற்கரை மண்டல மேலாண்மை திட்டங்களில் பதிவு செய்ய வேண்டும். புதுச்சேரியை ஆளும் என்.ஆர். காங்கிரஸ்- பாஜக அரசு  இதுவரை மூன்று வரைவு மேலாண்மை திட்டங்களை வெளியிட்டு திரும்பப் பெற்றாலும், சிஆர்இசட் அறிவிப்பாணை 2019ல்  கொடுத்துள்ள வழிகாட்டு தல்களைப் பின்பற்ற வில்லை என்றும் மார்ச் 2023 வெளிவந்த முதல் வரைவு திட்டங்களில் ஒரு மீனவ  கிராமத்தை கூட வரைவு  அறிக்கையில் காட்ட வில்லை என்றும் கடற்கரை யில் கடலும் வெறுமையாக இருந்ததையும் தலைவர்கள் வெளிப்படுத்தினர். மீனவர்களின் உரிமைக ளுக்கு எதிராகவும் பெரு  முதலாளிகளுக்கு ஆதரவா கவும் மீனவர்களின் பொது சொத்துக்களை தனியா ருக்கு தாரை வார்க்க திட்ட மிடும் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக அரசைக் கண்டித்து, அனைத்து மீனவ கிராமங்க ளும் இந்தியா கூட்டணி கட்சி களும் முற்போக்கு அமைப்பு கள் ஒன்றிணைந்து வரும் 25 ஆம் தேதி சுதேசி மில் அருகே மாபெரும் ஆர்ப்பாட் டம் நடத்துவது என்று இந்த கூட்டத்தில் முடிவு செய்யப் பட்டது.(மேலும் விவரங்களுக்கு கியுஆர் கோடை ஸ்கேன் செய்யவும்.)