அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி லஞ்சம் பெற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் சில அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்ப தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை முடிவு செய்துள்ளது.
திண்டுக்கல் அரசு மருத்துவரிடம் இரு தவணைகளில் மொத்தம் ரூ.20 லட்சம் லஞ்சம் பெற்றதாக அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை மாநில ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர். இதைத் தொடர்ந்து, மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் 13 மணிநேரம் நடத்தப்பட்ட சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் தகவல் வெளியாகி உள்ளன. இந்த நிலையில், இவ்வழக்கில் மேலும் சில அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்ப தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை முடிவு செய்துள்ளது.