சென்னை:
தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் சனிக்கிழமையன்று இரண்டாவது நாளாக நடைபெற்றது.தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அரசாணை 354-ல் கூறியுள்ளபடி ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை. அதைஉடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பனஉள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவர்கள் வெள்ளியன்று முதல் போராட்டத்தை தொடங்கியுள்ளர்.சனிக்கிழமையன்று இரண்டாவது நாளாக அரசு மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்ந்தது.மருத்துவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிபோராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்றுபல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், மருத்துவர்கள் சங்க நிர்வாகிகள் கூறுகையில்,தமிழகம் முழுவதும் அவசர சிகிச்சை பிரிவு, விபத்து சிகிச்சை பிரிவு, காய்ச்சல் வார்டுகளில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தாலும், டாக்டர்கள்யாரும் வருகை பதிவேட்டில் கையெழுத்திடவில்லை.ஆனால், மருத்துவமனை தரப்பில் 90 சதவீதம் வருகைபதிவேடு இருந்ததாக அரசுக்கு பொய்யாக ஒரு அறிக்கையை சமர்ப்பித்துள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டுவரும் எங்களுக்கு பயிற்சி மருத்துவர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். தமிழக முதல்வர்எங்களுடைய கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி5 மருத்துவர்கள் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தைதொடங்கியுள்ளனர் என்று தெரிவித்தனர்.