சென்னை:
சென்னை மாநகரம் ஞாயிற்றுக்கிழமை (ஆக.23) தனது 382-வது பிறந்த நாளை ‘சென்னை தினமாக’ கொண்டாடியது.
தமிழகத்தின் தலைநகரான சென்னையின் நீண்ட பாரம்பரியத்தைச் சிறப்பிக்கும் வகையில் ‘சென்னை தினம்’ ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் ஞாயிறன்று 382-வது சென்னை தினம் கொண்டாடப் பட்டது. இதை முன்னிட்டு சென்னை மாநகராட்சியின் ரிப்பன் மாளிகை உள்ளிட்ட அனைத்துக் கட்டிடங்களும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.இதை முன்னிட்டு தமிழக முதலமைச் சர் மு.க.ஸ்டாலின் சென்னை மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: சீர்மிகு, சிங்கார - வந்தாரை வாழவைக்கும் தருமமிகு சென்னை, பல அடையாளங்களுக்கும் சிறப்புகளுக்கும் சொந்தமானது. தொலைநோக்குப் பார்வையுடன் சென் னையின் வளர்ச்சிக்குப் பங்களித்தது தி.மு.க. அரசு; இனியும் தொடரும். சென்னை மாநகர மக்களுக்கு மெட்ராஸ்தின வாழ்த்துகள்! என வாழ்த்து செய்தியில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.