tamilnadu

img

ஆவின் பால் பொருட்களுக்கு தள்ளுபடி அறிவிப்பு

சென்னை, மே 31-உலக பால் தினத்தை முன்னிட்டு ஆவின்பால் பொருட்களுக்கு சனியன்று சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படும் என ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, ஆவின் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பால் ஒரு உலகளாவிய உணவு என்பதை குறிக்கும் வகையில் ஜூன் 1 ஆம் தேதியன்று கடைப்பிடிக்கப்படும் உலக பால் தினத்தினை கொண்டாடுவதில் ஆவின்பெருமிதம் கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக பால் தினத்தை முன்னிட்டு,அனைவரும் பயன்பெறும் வண்ணம் 5 சதவீதம் சிறப்புத் தள்ளுபடி செய்யப்படும் என தெரிவித்துள்ளது.