சிதம்பரம், ஜன.10- கடலூர் மாவட்டம் சிதம்ப ரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தேர் மற்றும் தரிசன விழா நடைபெற்றது. இதில் வெள்ளிக்கிழமை(ஜன.10) மதியம் 2 மணிக்குள் ஆருத்ரா தரிசனம் நிகழ்ச்சி நடைபெறும் என அறி விக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சிவபக்தர்கள், பொது மக்கள் என அனை வரும் தரிசனம் பார்ப்ப தற்காக காலையிலிருந்து கோவிலில் குவிந்தனர். இந்த நிலையில் தீட்சி தர்கள் மாலை 5 .15 மணிக்கு தான் தரிசன நிகழ்ச்சியை நடத்தினர். இதனால் பக்தர்கள் 3 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து தரிசனம் செய்தார்கள். அப்போது திருவாரூரிலிருந்து வந்திருந்த ராதாலட்சுமி(57) என்ற பெண் கூட்டத்தில் மாட்டிக் கொண்டு செல் போனுடன் கையை மேலே தூக்கியுள்ளார். இதனை பார்த்த தீட்சிதர்கள் அவர் போட்டோ எடுக்கிறார் என்று அவரது முகத்தில் கிரினி பழத்தால் அடித்துள்ளனர். பழம் முகத்தில் பட்டு மயக்க மடைந்த அவர் அங்கேயே விழுந்ததால் முகத்தில் காயம் ஏற்பட்டு முகம் வீங்கி யுள்ளது. தீட்சிதர்கள் சிதம்பரம் சாராட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற தரிசன விழா ஒருங்கிணைப்பு கூட்டத்தில் கலந்துகொண்டு மதியம் 2 மணிக்குள் தரிசனம் நடத்தப் பட்டன ஒப்புதல் தெரிவித்து கையெழுத்திட்டுள்ளனர். மூன்று மணி நேரம் தாமத மாக நடத்தியதால் பொது மக்கள் பக்தர்கள் கால் கடுக்க நின்று அவதிக்குள்ளா கினர்.