சென்னை:
மத்திய அரசு அனைத்து பீடி தொழிலாளர்களுக்கும் சேமநல நிதியிலிருந்து குறைந்தபட்சம் மாதந்தோறும் ரூ.7,500, கொரோனா கால நிவாரண நிதி வழங்கவேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 24 அன்று தமிழகத்தில் உள்ள அனைத்து பீடி தொழிலாளர்களின் சேமநல மருத்துவமனைகளின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு பீடித்தொழிலாளர் சம்மேளனம் (சிஐடியு) அறிவித்துள்ளது.
இதுகுறித்து சம்மேளனத் தின் பொதுச் செயலாளர் திருச் செல்வன் விடுத்துள்ள அறிக்கைவருமாறு:
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு 110 நாட்களுக்கு மேலாகியுள்ள சூழ்நிலையில் பீடித்தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்கான எந்தவித நிவாரண உதவிகளையும் மத்திய, மாநில அரசுகள் அறிவிக்கவில்லை. இதனால் நாடு முழுவதும் உள்ள 70 லட்சத் திற்கும் மேற்பட்ட பீடி சுற்றும் தொழிலாளர்களும் பாதிப்புக் குள்ளாகியுள்ளனர். இதில் தமிழகத்தில் 5 லட்சத்திற்கும் மேற் பட்ட தொழிலாளர்களும் பாதித் துள்ளனர்.மத்திய அரசிடம் பீடித்தொழிலாளர் சேமநல நிதியாக பலநூறு கோடி ரூபாய் உள்ளது. இந்த நிதியானது பீடித் தொழிலாளர்களின் பல்வேறு சேமநல திட்டங் களுக்காகவே வசூலிக்கப்படும் நிதியாகும். இந்த பேரிடர் காலத்தில் பீடித்தொழிலாளர் களை பாதுகாக்க குறைந்தபட்சம் ரூ.7,500 நிவாரணமாக சேமநல நிதியிலிருந்து வழங்க முடியும். ஆனால் மத்திய பாஜக அரசு பீடித்தொழிலாளர்களை பற்றி கவலைப்படவில்லை.தமிழக அரசு கட்டுமானம் உள்ளிட்ட முறைசாரா தொழிலாளர்களுக்கும், பட்டாசு, தீப்பெட்டி, கைத்தறி, முடித்திருத்துவோர் என பல தரப்பினருக்கு நிவாரண உதவித் தொகை வழங்கியது. ஆனால் கிராமப் புற, வறுமை நிலையில் உள்ள லட்சக்கணக்கான பீடித் தொழிலாளர்களுக்கு நிவாரண உதவித் தொகை வழங்க முன்வரவில்லை. தொழிலாளர் துறை அமைச்சரிடம் பேசினால் பீடி தொழில் எனது துறையில் வராது என்கிறார். இது தான் தமிழக அரசின் நிலைமை.
எனவே கீழ்கண்ட கோரிக் கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு பீடித்தொழிலாளர் சம்மேளனம் (சிஐடியு) சார்பில் 24.07.2020ம் தேதி அனைத்து பீடி சேமநல மருத்துவமனைகள் முன்பு ஆர்ப்பாட்டங் கள் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.கோரிக்கைகள் வருமாறு:அனைத்து பீடி தொழிலாளர்களுக்கும் தினசரி 1000 பீடிக்கு முழு வேலை (வாரத்தில் 6 நாள்) மற்றும் முழு ஊதியத்தை பீடி கம்பெனி நிர்வாகங்கள் வழங்கவேண்டும். கொரோனா காலத்தை ஒரு சாக்காக வைத்து வேலை அல்லது ஊதியத்தை பீடி கம்பெனிகள் குறைக்கப்பட கூடாது. பீடி பண்டல் லேபிள் ஒட்டுபவர்கள் பேக்கர்கள் மற் றும் உள்ள ஊழியர்கள் அனைத்து பீடி தொழிலாளர்களுக்கும் வேலை வழங்காத கொரோனா காலத்திற்கு முழு ஊதியம் வழங்கப்பட வேண்டும்.மத்திய அரசு அனைத்து பீடி தொழிலாளர்களுக்கும் சேமநல நிதியிலிருந்து குறைந்தபட்சம் மாதம் ரூ.7,500 கொரோனா கால நிவாரணமாக வழங்கவேண்டும். தமிழ் மாநில அரசும் இதர தொழிலாளர்களுக்கு வழங்கியது போல நிவாரண நிதி உதவியை அறிவிக்க வேண்டும். பீடி தொழிலாளர் சேமநலநிதியின் கீழ் உள்ள அனைத்து பீடி மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்கள் தேவையான அனைத்து உள் கட்டமைப்பு மற்றும் மருந்துகளும் முறையாக பீடி தொழிலாளர்களுக்கு கிடைத்திடவேண்டும்.பீடி தொழிலாளர்கள் சேமநல நிதியின் அனைத்து திட்டங்களும் பயன்களும் தொடர்ந்து இருக்கவேண்டும். அந்த திட்டங்களை நிறுத்திடக்கூடாது. தற்போதைய கொரோனா சூழ்நிலையின் பீடி தொழிலாளர்கள் போராடி பெற்ற தொழிலாளர்கள் நல சட்டங்களை உரிமைகளை மறுத்தல் வேலை நேரங்களை அதிகப்படுத்துதல் அல்லது முதலாளிகளுக்கு ஆதரவாக தொழிலாளர் நல சட்டங்களை திருத்தி அமல்படுத்திட மத்திய அரசு முயற்சிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.