மத்திய, மாநில அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையை கண்டித்தும், சுமைப்பணி தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் உருவாக்கக் கோரியும் சென்னை பெருநகர சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தின் சார்பில் வெள்ளியன்று (செப்13) சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிஐடியு வட சென்னை மாவட்டச் செயலாளர் சி.திருவேட்டை, சுமைப்பணி சங்க பொதுச் செயலாளர் ஆர். அருள்குமார், சங்க நிர்வாகிகள் கோதண்டன், புஷ்பராஜ், சி. குமார் மாவட்டக் குழு உறுப்பினர்கள் எம்..ராமன், எஸ். இருதயராஜ் ஆகியோர் பேசினர்.