tamilnadu

img

திரைத்துறையை ஜனநாயகப்படுத்த வேண்டும் சென்னை திரைப்பட சங்க விழாவில் வே.மீனாட்சி சுந்தரம் பேச்சு

சென்னை,ஜூன் 9 - தமுஎகச வடசென்னை மாவட்டக்குழு சார்பில் சென்னை திரைப்பட சங்கம் திரை விழா  சிந்தாதிரிபேட்டையில் சனிக்கிழமை யன்று நடைபெற்றது. இதில் உரை யாற்றிய மார்க்சிய சிந்தனையாளர் வே.மீனாட்சி சுந்தரம், “திரைப்பட ங்கள் குறித்தான பிம்பங்களை இந்த மாற்று சினிமா வல்லுனர்கள் மாற்ற முயற்சிப்பது வரவேற்புக்குரியது” என்றார். வணிகமயமாக்கப்பட்ட வெள்ளித்திரையில் வெளிவராத சமூக அவலங்களை சென்னை திரைப்பட சங்கம் காட்சிப்படுத்த முயற்சிக்கிறது. கடந்த 2010ல் துவங்கி இன்று வரை 40க்கும் மேற்பட்ட குறும்படங்கள், ஆவணப்படங்களை இயக்கியும் தயாரித்தும் மக்கள் மத்தியில் ஆக்கப்பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது என்றும் அவர் கூறினார். வடசென்னையிலிருந்து திரைப்பட சங்கத்தின் மூலம் எண்ணற்ற படைப்பாளிகளின் படைப்புக்கள் உலக அரங்கில் பல விருதுகளையும், பரிசுகளையும் குவித்து வருவது பெருமைக்குரிய அம்சமாகும். இவர்களின் கலைப்படைப்பு சினிமாவை ஜனநாயகத்துவத்தோடு மாற்று சினிமா பார்வையாளர் களத்தை உருவாக்குகிறது. தமுஎகச வின் வழிகாட்டுதலோடு சென்னை திரைப்பட சங்கம் தமிழகத்தில் முத்திரை பதிக்கும் எனவும் அவர் தெரிவித்தார். சென்னை திரைப்பட சங்கத்தின் ஸ்தாபகரில் ஒருவராக சி.சுரேந்திரபாபு நினைவரங்கில் நடைபெற்ற விழாவிற்கு திரைப்பட சங்கத் தலைவர் தனசேகர் மோகன் தலைமை தாங்கினார். செயலாளர் யாக்னா வரவேற்றார்.  தமுஎகச மாநில துணைத் தலைவர் இரா.தெ. முத்து, இயக்கு நர்கள் பாலாஜி தரணிதரன், சி.விஜயன், முனைவர் அ.பகத்சிங் ஆகியோர் பேசினர். தமுஎகச வடசென்னை மாவட்டச் செயலாளர் தி.ராஜேந்திரன், தமிழாசான் சீதரன், அருண்குமார், வி.சக்திவேல் ஆகியோர் கருத்துரையாற்றினர். நிறைவாக சுகந்திரன் நன்றி கூறினார்.  இந்த விழாவில், உலக அளவில் விருதுகளை குவித்துவரும், தனசேகர் மோகனின் திரைக்கதை இயக்கத்தில் வெளியான மீனா, யாக்னா இயக்கிய 23சி ஆகிய குறும்படங்கள் திரையிடப்பட்டன.  சென்னை திரைப்பட சங்க நிர்வாகிகள் பிரதீப், ஜாய்மோகன், வசந்த் ஆகியோர் எடுத்த உயிரோட்ட மான நிழற்படங்கள் விழா அரங்கில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.