tamilnadu

img

பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து கள்ளக்குறிச்சியில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி, ஜூன் 24- விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் தொடர்ந்து நடைபெற்ற இளம் பெண்கள் கல்லூரி மாணவிகள் ஆகியோர் மீதான பாலியல் வன்கொடுமைகள் மீது உரிய நடவடிக்கை எடுத்து குற்றவாளிகள் அனைவரையும் கடும் சட்டப்பிரிவுகளின் கீழ் கைது செய்யக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கள்ளக்குறிச்சி வட்டக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. குற்றவாளிகளான ராஜா, வேலுமணி ஆகிய இருவரைத் தவிர மேலும் பலர் இதில் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதே போல அவர்களை பாதுகாக்கும் வகையில் உள்ளூர் காவல் துறையி னர் செயல்படுவதாகவும் தெரிகிறது. எனவே இந்த குற்றச்செயல்க ளில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்து உயர்மட்ட விசாரணை நடத்தி உண்மைகளை வெளிக்கொண்டு வர வேண்டும்,  பாதிக்கப்பட்ட பெண்களின் கண்ணியம் பாதிக்காத வகையில் உரிய முன்னெச்சரிக்கையோடு காவல்துறை விசாரணை நடைபெற வேண்டும் என்பன உள்ளிட்ட மேலும் பல கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. திங்களன்று (ஜூன் 24) கள்ளக்குறிச்சி கச்சேரி சாலை அம்பேத்கர் சிலையின் கீழ் நியாயம் கேட்டு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத் திற்கு கட்சியின் வட்டச் செயலாளர் பி.மணி தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.வாலண்டினா, விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளர் டி.ஏழுமலை, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.எம் ஜெய்சங்கர், எம்.கே.பூவராகன் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். செயற்குழு உறுப்பினர்கள் ஏ.வி..ஸ்டாலின்மணி, எம்செந்தில், டி.எஸ்.மோகன் மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர்கள், இடைக்கமிட்டி செயலாளர்கள், பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். மாவட்டக்குழு உறுப்பினர் அ.பா.பெரியசாமி நன்றி கூறினார்.