tamilnadu

img

கொரோனா நிவாரணம் 25 விழுக்காடு கூடுதலாக வழங்குக.... மாற்றுத் திறனாளிகள் சங்கம் கோரிக்கை.....

சென்னை:
மாற்றுத் திறனாளிகளுக்கு அரசின் சட்ட விதிமுறைகள் படி கொரோனா நிவாரணம் 25 விழுக்காடு கூடுதலாக வழங்க முதலமைச்சர் உத்தரவிட வேண் டும் என்று வலியுறுத்தப் பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநிலத் தலைவர் பா.ஜான்சிராணி, பொதுச் செயலாளர் நம்பிராஜன் ஆகியோர் வெளியிட்டிருக்கும் அறிக்கை வருமாறு:-
தங்கள் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்றவுடன் கொரோனா நிவாரணம் முதல் தவணையாக ரூ.2.000 அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கி வருவதை எமது சங்கம் மனதார வரவேற்கிறது.2016 உரிமைகள் சட்ட விதிகளின்படி மாற்றுத்திறனாளிகள் இடம்பெற்றுள்ள குடும்பங்களுக்கு கொரோனா நிவாரணத் தொகை 25 விழுக்காடு கூடுதலாக உயர்த்தி வழங்க உத்தரவிட தமிழக முதலமைச்சரை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம். 

முந்தைய அதிமுக அரசு, மாற்றுத்திறனாளி உரிமைகள் சம்பந்தப்பட்ட இந்த சட்ட விதிகளை காலில் போட்டு மிதிக்கும் விதமாகவே நடந்து கொண்டது. இதனால், மாற்றுத்திறனாளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.அதிமுக அரசு போன்று அல்லாமல், மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளை நிலைநாட்டிட, சட்ட விதிகளை அமல்படுத்துவதில் முனைப்புக் காட்ட அனைத்துத்துறை அதிகாரிகளுக்கும் உரிய உத்தரவுகளை பிறப்பித்து திமுக அரசு முன்னுதாரணமாகத் திகழ வேண்டும் என முதலமைச்சருக்கு வேண்டுகோள் விடுக்கிறோம்.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்கள்.

தடுப்பூசி முகாம்
மாற்றுத்திறனுடையோர் வீடுகளுக்கு நேரில் சென்று தடுப்பூசி செலுத்த வேண்டியதன் அவசியத்தையே, சென்னை கீழ்ப்பாக் கார்டன் பகுதியில் இயங்கும் பாலவிகார் ஆதரவற்ற மனவளர்ச்சி குன்றிய குழந்தைக ளுக்கான இல்லத்தில் 74 குழந்தைகள் கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டிருக்கும் செய்தி உணர்த்துகிறது.  தங்களுக்கு என்ன நடக்கிறது என்பதை அறியக்கூட முடியாத குழந்தைகளைக் காப்பாற்றவும்.  இந்த நிலைமை மற்ற மாற்றுத்திறனுடை யோருக்கு ஏற்படாமல் இருக்க சிறப்பு முகாம்கள் அல்லது வீட்டிற்கே சென்று தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை தமிழக அரசு துவக்க தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் வலியுறுத்தியுள்ளது.