ஒப்பந்த பணியாளர்கள் 2 வது நாளாக வேலைநிறுத்தம்
பணிந்த தனியார் நிர்வாகம்
தேனி, ஆக.11- தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஊதியம் குறைக்கப்பட்ட பிரச்சனையில் 2 வது நாளாக ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் அதிகாரிகள், தனியார் நிர்வாகம் நடத் திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு பணிக்கு திரும்பினர். தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனியார் ஏஜென்சி மூலம் 300க்கும் மேற்பட்ட ஒப்பந்த பணி யாளர்கள் வேலை செய்து வருகின்றனர். தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தூய்மை பணி கள், மருத்துவ உபகரணங்கள் எடுத்துச் செல்லுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் செய்து வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளாக ஒரு தனியார் நிறுவனத்தின் மூலம் வேலை செய்து வந்த ஒப்பந்த பணியாளர்களுக்கு பிடித்தம் போக ரூ.12 ஆயிரத்து 500 சம்பளமாக வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் ஒப்பந்த பணியாளர்கள் அனைவரும் வேறொரு ஏஜென்சிக்கு மாற்றப்பட்டனர். புதிதாக வந்த ஏஜென்சி நிர்வாகம் ஒப்பந்த பணியாளர்களுக்கு மாதம் ரூ.15,000 ஆக சம்பளத்தை உயர்த்தி வழங்கியது. இந்நிலை யில் இந்த மாதம் ரூ.12,500 சம்பளம் மட்டுமே ஒப்பந்த பணி யாளர்களுக்கு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆவேசமடைந்த ஒப்பந்த பணியாளர்கள், கடந்த மூன்று மாதங்களாக வழங்கி வந்த 15 ஆயிரம் ரூபாய் சம்பளத்தை வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஞாயிறு காலை முதல் பணிக்கு செல்லாமல் மருத்துவ மனை வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற போராட்டத்தில், போலீசார் தனியார் நிறுவன ஏஜென்சி நிர்வாகிகளும், மருத்துவ மனை நிர்வாகமும் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்னர் ஒப்பந்தப் பணியாளர்கள் வேலைக்கு திரும்பினர். இந்த நிலையில் திங்களன்றும் அதே கோரிக்கையை வலி யுறுத்தி 2வது நாளாக ஒப்பந்த பணியாளர்கள் போராட் டத்தில் ஈடுபட்டனர். இதனால் மருத்துவமனையில் சுகா தாரப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் அடியோடு பாதிக்கப்படும் நிலை உருவானது. இதனைத் தொடர்ந்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வா கத்தினர் மற்றும் தனியார் நிர்வாகத்தினர் ஒப்பந்த பணி யாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் கோரிக் கையை ஓரிரு நாட்களில் நிறைவேற்றி தருவதாக உறுதி யளித்தனர். இதனால் ஒப்பந்த பணியாளர்கள் வேலைக்கு திரும்பினர். 2வது நாளாக ஒப்பந்த பணி யாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட சம்பவம் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.