சென்னை,ஜூன் 27- சென்னையில் மெட்ரோ ரயி லில் நிகழ்ந்து வரும் தொடர் விபத்துக்களை தடுத்து நிறுத்தி பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசு தலையிட வேண்டும் என்று சிஐடியு வேண்டு கோள்விடுத்துள்ளது. இதுகுறித்து சிஐடியு மாநிலத் தலைவர் அ. சவுந்தரராசன் வெளி யிட்டிருக்கும் அறிக்கை:- சென்னை மெட்ரோ ரயில் நிறு வனம் நிரந்தரத் தன்மையுள்ள பணிகளிலும், உயர்திறமை தேவைப்படுகிற வேலைகளிலும் அவுட்சோர்சிங் ஏற்பாட்டில் ஒப் பந்த ஊழியர்களைப் பயன்ப டுத்துகிறது. பல்லாயிரக்கணக் கான மக்கள் பயணம் செய்யும் மெட்ரோ ரயிலில் பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியமானது. இதனால்தான் சென்னை மெட்ரோ ரயிலில் பணியமர்த்தப்பட்ட தொழிலாளர்கள் எழுத்துத் தேர்வு, திறனறிவுத் தேர்வு, மருத்துவ தகுதித் தேர்வு போன்ற வற்றின் மூலம் தேர்ந்தெடுக்கப் பட்டனர். இதற்குப் பிறகும் தில்லி மெட்ரோ ரயிலில் அவர்களுக்கு தீவிரபயிற்சியும் அளிக்கப் பட்டது. ஆனால் இப்போது டெண்டர் விட்டு ஒப்பந்தமுறை யில் பணியாட்கள் அமர்த்தப்படு கின்றனர். காண்ட்ராக்ட் முறைப் படுத்தல் சட்டத்திற்கு புறம்பாக நிரந்தரத் தன்மையுள்ள பணி களிலும் ஒப்பந்த முறை பணி யாளர்கள் அமர்த்தப்படு கின்றனர். அவர்கள் அந்தப் பணி களைச் செய்வதற்கான தகுதி யும், பயிற்சியும், திறமையும் பெற்றவர்களா என்பது தெரிய வில்லை. மெட்ரோ தொடர் வண்டியை ஓட்டும் பணியில் கூட ஒப்பந்த முறைத் தொழிலாளர்கள் ஈடு படுத்தப்படுகிறார்கள் என்பது அதிர்ச்சியளிக்கிறது. மின் அழுத் தத்துறை மேலே செல்லும் மின் கம்பிகள் மற்றும் உபகரணங் களை பராமரிக்க வேண்டும். இந்த பராமரிப்பு தொடர்ச்சியாக செய் யப்படவேண்டிய உயர் திறமை யான வேலை. இந்தப்பணியை பயிற்சிபெற்ற நிரந்தரத் தொழி லாளர்கள் செய்து வந்தனர். ஆனால் பிறகு அந்த மின்கம்பி பராமரிப்பு வேலையை அவுட் சோர்சிங் மூலம் ஒப்பந்தத் தொழி லாளர்களிடம் நிறுவனம் ஒப்ப டைத்தது. அதன் பிறகுதான் ஜூன் 25 அன்று மின்கம்பி அறுந்து விழுந்து சுமார் 3 மணி நேரத்திற்கு மேல் ரயில் சேவை முடங்கியது. அதிருஷ்டவசமாக வேறு அசம்பா விதம் நடக்காமல் போனது. இதே போல மெட்ரோ ரயில் நிலை யங்களுக்கான மின்சாரத்தை வழங்கும் குறை மின்னழுத்த மின் மாற்றி ஜூன் 26 அதிகாலையில் வெடித்து விபத்து ஏற்பட்டது. ஊடகங்களில் வெளியான வெடித்து சிதறிய காட்சி எல்லோரையும் பதைபதைப்புக் குள்ளாக்கியது. அப்போது பயணி கள் யாரும் நடை மேடையில் இல்லை. இதனால் உயிரிழப்பு ஏற்படவில்லை. மின்னழுத்தத்துறை மூலம் மின்மாற்றிகளைப் பராமரிப்ப தும் நிரந்தரத் தொழிலாளர்களின் வேலையாக இருந்தது. இதை யும் இப்போது ஒப்பந்தத் தொழி லாளர்களிடம் நிறுவனம் ஒப்ப டைத்துவிட்டது. மின் மாற்றியின் பராமரிப்பு குறைபாடே இந்த விபத்திற்கும் ஒரு காரணமாக இருக்கும். எனவே, அரசின், தொழிலக பாதுகாப்பு இயக்குநர் உடனடியாக தலையிட்டு சட்ட விரோதமாக நிரந்தரத் தன்மை யுள்ள பணிகளில் பயன்படுத் தப்படும் ஒப்பந்த ஊழியர்கள் பிரச்சனையில் தீவிர நடவ டிக்கை எடுக்க வேண்டும். மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இது போன்ற செயல்களை தடுத்து நிறுத்தி பயணிகள் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டுகிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.