விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே கூனிமேடு மீனவ குப்பத்தைச் சேர்ந்தவர் மோகன்.இவர் மீன் பிடி தொழில் செய்து வரும் மீனவர். இவருக்கு மோனிஷா (18) உட்பட 3 பெண் குழந்தைகள். இதில் மோனிஷாவை நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படிக்க வைத்து உள்ளார்.
2017-18 ஆம் ஆண்டு 12 ஆம் வகுப்பு தேர்வில் மோனிஷா 956 மதிப்பெண் எடுத்துள்ளார். மருத்துவக் கல்வியின் மீது ஈர்ப்பு ஏற்பட்டதால் கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதியுள்ளார். அதில் தோல்வி அடைந்ததால், இந்த ஆண்டு நீட் தேர்வில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் தனியார் ‘நீட்’ பயிற்சி மையத்தில் கடந்த ஓராண்டு காலமாக படித்து 2வது முறையாக எழுதியுள்ளார்.
இதன் முடிவு வெளியானதில் மோனிஷா மீண்டும் தோல்வி அடைந்துள்ளார். இதனால் மனமுடைந்த அவர், வீட்டில் யாரும் இல் லாத நேரத்தில் துப்பட்டாவால் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார். இந்த தகவலை அறிந்த மரக்காணம் காவல்துறையினர் சம்பவ இடத் திற்கு வந்து மோனிஷாவின் உடலை கைப்பற்றி புதுவை கலாபட்டிலுள்ள சிம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.கடந்த ஆண்டு செஞ்சி அருகே பிரிதீபா, இந்த ஆண்டு மரக்காணம் அருகே மோனிஷா நீட் தேர்வு தற் கொலை விழுப்புரம் மாவட்டத்தில் தொடர் கதையாக மாறி வருகிறது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை சீனிவாசன் நகர் பகுதியை சேர்ந்த நம்பிராஜ்(44), மீன்பிடி படகுகளை வாடகைக்கு விடும் தொழில் செய்து வருகிறார். மேலும் பட்டுக் கோட்டை பேருந்து நிலை யத்தில் சைக்கிள் ஸ்டாண்ட் நடத்தி வருகிறார். இவரது மகள் வைஷ்யா (17). பட்டுக்கோட்டை இசபெல்லா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ப்ளஸ் 2 படித்து தேர்ச்சி பெற்றுள் ளார். மருத்துவராக நீட் தேர்வினை எழுதினார்.
இந்நிலையில் நீட் தேர்வில் 720 மார்க்கு 230 மார்க் மட்டுமே எடுத்து வெற்றி பெறவில்லை என்று தெரிந்ததும், ஏற்பட்ட மன உளைச்சலில் வீட்டில் இருந்த மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதை யடுத்து அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி வைஷ்யா இறந்தார். இதையடுத்து அவ ரது உடல் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்யப்பட்டது. இது குறித்து பட்டுக்கோட்டை காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
நீட் தேர்வு தோல்வி காரணமாக திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியைச் சேர்ந்த மாணவி ரிதுஸ்ரீ தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தமிழகத்தையே உலுக்கியிருக்கும் இந்த இரண்டு சோகச் சம்பவங்களிலிருந்து மீள் வதற்குள் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி மோனிஷா தூக்கிட்டுதற்கொலை செய்து கொண்ட சம்பவம் மேலும் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது.