tamilnadu

img

பத்திரிகையாளர்கள் மீதான அவதூறு-தனிநபர் தாக்குதலுக்கு கண்டனம் பத்திரிகையாளர் சங்கங்கள்-அமைப்புகளின் கூட்டமைப்பு அறிக்கை

சென்னை,ஜூலை 8- பத்திரிகையாளர்கள் மீதான அவதூறு மற்றும் அவர்கள் மீதான தனிநபர் தாக்குதலுக்கு பத்திரிகையாளர் சங்கங்கள்-அமைப்புகளின் கூட்டமைப்பு  கண்டனம் தெரி வித்துள்ளது. ஊடகவியலாளர் குடும்ப உறுப்பினர்களுக்கு மன உளைச்சலை உருவாக்கி, மிரட்டல் போன்ற செயல்களில் ஈடுபடுவோர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து கூட்டமைப்பின் சார்பில் வெளியிடப் பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: எந்த ஆதாரமும் இல்லாமல், மதம் சார்ந்த உள்நோக்கங்க ளுடனும், சமூக நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையிலும் தொடர்ந்து அத்துமீறி அவதூறு செய்வதையே பிழைப்பாக் கிக் கொண்ட ஒரு சிலர் தற்போது பத்திரிகையாளர்கள் மீதும் பாய்ந்து குதறி, தனிநபர் தாக்குதலையும் நடத்துகின்றனர். எந்தவொரு செய்தி நிறுவனத்திற்கும் ஒரு சமூக, அரசியல் பார்வை இருக்கலாம். அதை யாரும் விமர்சிக்கலாம். ஆனால் தனியொரு ஊடகவியலாளரின் குடும்ப உறவுகளைக் கொண்டு அந்த ஊடகவியலாளரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்ற அழுத்தத்தை ஒரு நிர்வாகத்தின் மீது செலுத்துவது வன்மமான அணுகுமுறையாகும்! சுயஆதா யம் கருதி, ஊடகத்துறையின் கவனம் பெற சில ஊடகவிய லாளர்களை ’டார்கெட்’ செய்து, பொய்ப்பிரச்சாரம் செய்வது கடுமையான கண்டனத்திற்குரியது. மேலும் ஊடகவியலாளர் குடும்ப உறுப்பினர்களின்  படங்க ளை பொது வெளியில் வெளியிட்டு மன உளைச்சலை உரு வாக்குவதும், மிரட்டுவதும் மிகவும் கண்டிக்கத்தக்கது. இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர்  மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.