சென்னை:
இந்திய சுதந்திரப்போராட்ட வீரரும் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும்தலைவருமான தோழர் என். சங்கரய்யா 99 வயதை கடந்து நூறாவது வயதில்அடியெடுத்து வைத்துள்ளார். உழைப்பாளி மக்களின் போற்றதலுக்குரிய தலைவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கிய தலைவர்களில் வாழும் இரண்டு தலைவர்களில் ஒருவராக திகழ்பவர் தோழர் என். சங்கரய்யா. அவரது பிறந்த நாளையொட்டி தோழர் சங்கரய்யாவிடம் வாழ்த்துபெறுவதற்கும் வாழ்த்தவும் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர்சீத்தாராம் யெச்சூரி வியாழனன்று (ஜூலை 15) சென்னை குரோம்பேட்டையிலுள்ள சங்கரய்யா இல்லத்திற்கு வருகை தந்தார். அவருடன் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
தோழர் என். சங்கரய்யாவிடம் வாழ்த்துப்பெறுவதற்காக குரோம்பேட்டைக்கு வருகை தந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் சால்வைஅணிவித்து வரவேற்றார். அதனைத்தொடர்ந்து தோழர் என். சங்கரய்யாவை சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து பெற்றதுடன் மேலும் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என்று வாழ்த்துக் கூறினார். திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, தயாநிதிமாறன், எம்பிக்கள்,தமிழ்நாடு அமைச்சர்கள் க.பொன்முடி, தா.மோ. அன்பரசன் உள்ளிட்டோரும்வருகை தந்து வாழ்த்துப்பெற்றனர். அப்போது, இன்னும் பல ஆண்டுகள்வாழ வேண்டும் என்று தெரிவித்தனர். முதலமைச்சர் வருகையையொட்டி அந்த பகுதி முழுவதும் பலத்த காவல் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.