tamilnadu

img

தமிழ்நாட்டு இளைஞர்களை வஞ்சிக்கும் ஒன்றிய அரசு!

பிற மாநில இளைஞர்களுக்கு வேலை அளிப்பதற்காக தமிழ்நாட்டு இளைஞர்களை வஞ்சிக்கிறது ஒன்றிய அரசு என்று சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ் விமர்சித்துள்ளார்.
தூத்துக்குடியில் உள்ள வ.உ.சிதம்பரனார் துறைமுகக் கழகத்தில் (VOCPT) காலியாக உள்ள சட்ட அலுவலர் (Law Officer) மற்றும் உதவி செயற்பொறியாளர் (Assistant Executive Engineer) பணியிடங்களை நிரப்ப ஒன்றிய அரசு நடத்திய எழுத்து மற்றும் நேர்முக தேர்வில் யாரும் தேர்வாகவில்லை என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், பிற மாநில இளைஞர்களுக்கு வேலை அளிப்பதற்காக தமிழ்நாட்டு இளைஞர்களை வஞ்சிக்கிறது ஒன்றிய அரசு என்று சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ் விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவரது எக்ஸ் பதிவில் கூறியதாவது:
"பிற மாநில இளைஞர்களுக்கு வேலை அளிப்பதற்காக ஒன்றிய அரசு அட்டூழியம்.
எழுத்து தேர்வு, நேர்முகத்தேர்வு அனைத்தையும் நடத்திவிட்டு தூத்துக்குடி துறைமுக சபை நிர்வாகம் யாரும் தகுதி இல்லை என தமிழ்நாட்டு இளைஞர்களை வஞ்சித்திருக்கிறார்கள்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.