குடியுரிமைத் திருத்தச் சட் டத்திற்கு எதிராக, இந்தியக் குடி மக்களாகிய தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரி மைகளுக்கான சங்கத்தினர் நாகப்பட்டினம் மாவட்ட நீதி மன்றம் முன்பு மெழுகுவர்த்தி களை ஏந்தி தேசத்தைக் காத்திட உறுதிமொழி ஏற்று கொண்டனர். நிகழ்ச்சிக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம்.என்.கனி தலைமை வகித்தார். என். பன்னீர்செல்வம், பி.அசோக் குமார், ஏ.சிக்கந்தர், ஆர்.ராணி ஆகியோர் முன்னிலை வகித்த னர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.துரை ராஜ், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் ஜி.ஸ்டா லின், அனைத்துத் துறை ஓய்வூதி யர் சங்க மாவட்டச் செயலாளர் சொ.கிருஷ்ணமூர்த்தி சிறப்புரை யாற்றினர். மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் டி.கணேசன் உறுதிமொழி வாசிக்க, அனைவரும் உறுதி ஏற்றுக் கொண்டனர். சு.மணி, கே. செந்தில்குமார், பி.ஏ.ஜி.சந்திர சேகரன், ஆர்.தாமரைச்செல்வி, சபா.அருள்மணி, பி.சந்திரபாபு, இ.குப்புசாமி, ஏ.அப்துல்கரீம், எம்.சொக்கலிங்கம், வி.பி.முரு கன், என்.தவமணி கலந்து கொண்டனர்.
ஆக்கூர்
மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் ஆக்கூரில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் ஏ.ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ். துரைராஜ், மாவட்டக்குழு உறுப்பினர்கள் டி.சிம்சன், டி. இராசையன், ஆக்கூர் ஜமாத்தின் முத்தவல்லி சகாபுதீன், அப்துல் காதர் உரையாற்றினர். மனித நேய மக்கள் கட்சி மாநில செயற் குழு உறுப்பினர் ஷாஜகான், வாலிபர் சங்கத்தினர் உள்பட 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நிறைவாக கிளை செயலாளர் சிவசுப்ரமணியன் நன்றி கூறினார்.