சென்னை:
பஞ்சு மீதான 1 விழுக்காடு நுழைவுவரி ரத்து செய்ய சட்டம் கொண்டுவரப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவித்தார்.சட்டப்பேரவையில் சனிக்கிழமை(செப்.4) பேரவை விதி 110-ன் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுபேசினார்.
அப்போது, “இந்திய துணித்தொழில்வணிகத்தில் மூன்றில் ஒரு பங்கு தமிழ்நாடு துணித் தொழில் வகிக்கிறது. தமிழ்நாட்டிலுள்ள நூற்பாலைகளின் எண் ணிக்கை 1,570 ஆகும், இவ்வாலைகள் மூலம் நூற்கப்படும் நூல், நாட்டின் மொத்த நூற்புத்திறனில் 45 சதவீதம் ஆகும், தமிழ்நாட்டில் அமைந்துள்ள நூற்பாலைகளுக்குத் தேவையான பஞ்சின் அளவில் 95 சதவீதம் பிற மாநிலங்களிலிருந்து கொண்டு வரப்படுகிறது”என்றார்.தமிழ்நாடு வேளாண் பொருட்கள் விற்பனை (ஒழுங்குமுறை) சட்டம் 1987,பிரிவு 24-ன்படி, பஞ்சு மற்றும் கழிவுப்பஞ்சின் விற்பனை மதிப்பு மீது சந்தைநுழைவு வரியாக 1 சதவீதம் விதிக்கப்படுகிறது. மேற்படி சட்டத்தின்படி, பருத்தி பொதி, பஞ்சு மற்றும் கழிவுப் பஞ்சு ஆகியவை வேளாண் பொருட்களாகக் கருதப்பட்டு, தமிழ்நாட்டிலுள்ள சந்தைப் பகுதிகளில் கொள்முதல் அல்லது விற்பனைசெய்யப்படும் பொழுது 1 சதவீதம் வரி(சந்தைக் கட்டணம்) விதிக்கப்படுகிறது.சந்தை நுழைவு வரி என்பது, பருத்திப் பொதிகள் மீது மட்டுமே விதிக்கவேண்டும். மாறாக, பஞ்சு மற்றும் கழிவுப்பஞ்சு போன்ற உற்பத்தி பொருட்கள்மீதும் 1 சதவீதம் சந்தை நுழைவு வரி விதிக்கப்படுகிறது. இதனால் வெளி மாநிலங்களிலிருந்து பஞ்சு கொள்முதல் செய்யப்படும் பொழுது சிறு, குறு நூற்பாலைகள் போக்குவரத்துக் கட்டணம் செலுத்துவதிலே பெரும் நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. பஞ்சின் மீது விதிக்கப்படும் சந்தை நுழைவு வரியை நீக்க வேண்டுமென்பது தொழில்முனைவோர் மற்றும் நெசவாளர்களின் நெடுநாள் கோரிக்கையாக இருக்கிறது. இதனைக் கருத்திற் கொண்டு, பஞ்சு, கழிவுப்பஞ்சு மீதான ஒரு சதவீதம் வரி (சந்தைக்கட்டணம்) ரத்து செய்யப்படுகிறது. இதற்கான உரிய சட்டதிருத்தம் இந்தச் சட்டமன்றக் கூட்டத்தொடரிலே கொண்டு வரப்படும் என்பதையும் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.