சென்னை, செப்.16- மதுரவாயல் அருகே தாம்பரம் சென்ற 104 வழித்தட மாநகர பேருந்து சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோ மீது விழுந்ததில் ஆட்டோ ஓட்டுநர் தினேஷ் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மதுரவாயலில் தாம்பரம் நோக்கி சென்றுகொண்டிருந்த மாநகர பேருந்து திடீரென நிலை தடுமாறி சர்வீஸ் சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோ மீது விழுந்தது. இந்த சம்பவத்தில் ஆட்டோ ஓட்டுநர் தினேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
பேருந்தில் பயணம் செய்த 10க்கும் மேற்பட்டோருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது இந்த விபத்தில் சிக்கிய ஒரு சிலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.