tamilnadu

img

தமிழகத்தில் 60 ரயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகள் போராட்டம்....

சென்னை:
அனைத்து ரயில்களிலும் மாற்றுத் திறனாளிகள் பயணிக்கும் பெட்டியை இணைக்க வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் 60 ரயில் நிலையங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மத்திய அரசு மற்றும் ரயில்வே துறையை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் இந்த போராட்டம் நடைபெற்றது.

கொரோனா ஊரடங்கையொட்டி சிறப்பு பெயர்களில் ரயில்கள் இயக்குவதை கைவிட வேண்டும், பூட்டப் பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக் கான சிறப்பு பெட்டிகளை திறந்துவிட வேண்டும், ஏற்கெனவே மாற்றுத்திறனாளிகள் பெற்று வந்த கட்டணச் சலுகைகளை பறிக்கக் கூடாது, 50 ரூபாய் நடைமேடை கட்டணத்தை திரும்ப பெற வேண்டும், பிரதான ரயில் நிலையங்களில் மின்தூக்கிகளை அமைக்க வேண்டும்,ஆவுட் ஆப் ஆர்டர் என்ற பெயரில் முடக்கப்பட்டுள்ள மின்தூக்கி, நகரும் படிக்கட்டுகளை மீண்டும் இயக்க வேண்டும், புதுச்சேரி, சண்டிகர் யூனியன் பிரதேசங்களில் உள்ளது போன்று நாடு முழுவதும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்தோறும் பாதி விலையில் 25 லிட்டர் பெட்ரோல் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக் கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப் பட்டன.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய வளாகத்தில் நடைபெற்ற போராட்டத் தில் மாநிலத் தலைவர் பா.ஜான்சிராணி, மதுரையில் பொதுச் செயலாளர் எஸ்.நம்புராஜன், சேலத்தில் பொருளாளர் சக்கரவர்த்தி, திருச்சியில் மாநிலச் செயலாளர் ஜீவா, சென்னை கிண்டியில் செயலாளர் மாநிலச் செயலாளர் டி.வில்சன், செங்கல் பட்டில் துணைத்தலைவர் பாரதிஅண்ணா, திருவண்ணாமலையில் துணைத்தலைவர் சண்முகம், கிருஷ்ணகிரியில் துணைத்தலைவர் திருப்பதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.