tamilnadu

img

உள்ளாட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன பதவிகள் - முதலமைச்சர் அறிவிப்பு

உள்ளாட்சி அமைப்புகளில் நேரடி பிரதிநிதித்துவம் மூலம் 12,000 மாற்றுத்திறனாளிகளுக்கு வாய்ப்பு கிடைக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில், கூட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்க சட்ட முன்வடிவை பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்து பேசினார். இது குறித்து பேசிய முதலமைச்சர், "உள்ளாட்சி அமைப்புகளில் நேரடி பிரதிநிதித்துவம் மூலம் 12,000 மாற்றுத்திறனாளிகளுக்கு வாய்ப்பு கிடைக்கும். மாற்றுத்திறனாளிகள் தேர்தலில் போட்டியிடாமல் நியமன முறையில் உள்ளாட்சியில் பதவிகளை பெறுவர்; 493 மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு பணிகள் வழங்கப்பட்டுள்ளன" என்று தெரிவித்தார்.