சென்னை
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாள்தோறும் மின்னல் வேகத்தில் உள்ளது. கடந்த 2 நாட்களாக 4 ஆயிரத்துக்கும் இருந்த தினசரி பாதிப்பு இன்று மீண்டும் 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வரும் நிலையில், மற்ற மாவட்டங்களில் பரவல் வேகம் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் தமிழக்தில் இன்று ஒரே நாளில் 4,244 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் மொத்த பாதிப்பு 1,38,470 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 68 பேர் பலியாகிய நிலையில், மாநிலத்தின் மொத்த கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்தை (1,966) நெருங்கியது.
மேலும் இன்று 3,617 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 89 ஆயிரத்து 532 ஆக உயர்ந்துள்ளது.
மாவட்ட நிலவரம்
வழக்கம் போல சென்னையில் கொரோனா பரவல் ஓரளவு கட்டுக்குள் உள்ள நிலையில், இன்று 1,168 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூம் அங்கு மொத்த பாதிப்பு 77 ஆயிரத்து 338 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் இன்று 3,076 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னைக்கு அடுத்து அதிகபட்சமாக காஞ்சிபுரத்தில் 385 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மதுரையில் 319 பேருக்கும், செங்கல்பட்டில் 245 பேருக்கும், திருவள்ளூரில் 232 பேருக்கும், வேலூரில் 151 பேருக்கும், திருவண்ணாமலையில் 149 பேருக்கும், தூத்துக்குடியில் 136 பேருக்கும், நெல்லையில் 123 பேருக்கும், கோவையில் 117 பேருக்கும், தேனியில் 115 பேருக்கும், கன்னியாகுமரியில் 104, திருச்சியில் 103 பேருக்கும், தேனியில் 115 பேருக்கும், சேலத்தில் 98 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.