கடலூர், ஆக. 26- சிதம்பரம் நகரப்பகுதிக்குள் தில்லை யம்மன் ஓடை, பாசிமுத்தான் ஓடை ஆகி யவை செல்கின்றன. இந்த ஓடைகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார வேண்டு மென விவசாயிகள் தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்ததைத் தொடர்ந்து கடந்த 2018 ஆம் ஆண்டில் ஓடைகள் தூர்வாரப்பட்டன. அப்போது, ஓடையின் கரையில் அமைந்தி ருந்த வாசீகன் நகர், தில்லையம்மன் கோயில் தெரு, பூதகேணி, கோவிந்தசாமி தெரு ஆகிய பகுதிகளிலுள்ள 368 வீடுகள் ஆக்கிரமிப்பில் இருப்பதாகக் கூறி இடித்து அப்புறப்படுத்தப் பட்டன. இந்த வீடுகளில் பெரும்பாலும் சாதா ரண மக்களும் ஏழைகளும் வசித்து வந்த தால் அவர்கள் தங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்து வந்தனர். வீடு இடிக்கப்பட்டு ஓராண்டினைக் கடந்த நிலையிலும் அரசால் மாற்று இடம் வழங்கப்படவில்லையாம். எனவே, அப்பகுதி யினர் திங்களன்று(ஆக.26) மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் நடைபெற்ற பொது மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் மனு அளிப்ப தற்காக வந்திருந்தனர். வீடு இடிக்கப்பட்டவர்களுக்கு இதுவரை யில் மாற்று இடம் வழங்கப்படாததால் சிலர் வாடகை வீட்டிலும், மற்றவர்கள் வாடைக்குக் கூட வீடு கிடைக்காமலும் அவதியுற்று வரு கின்றனர். எனவே, மாற்று இடமும் அந்த இடத்தில் வீடு கட்டித்தருவதற்கான ஏற்பாட்டி னையும் மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.