tamilnadu

img

காணொலிக் காட்சி மூலம் பதிலளிக்க சசிகலாவுக்கு அனுமதி

சென்னை:

அந்நியச் செலாவணி மோசடி வழக்கில் நீதிபதியின் கேள்விக்கு காணொலிக் காட்சி மூலம் ஆஜராகி பதிலளிக்க சசிகலாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்து உத்தர விட்டது.


ஜெஜெ தொலைக்காட்சிக்கு வெளிநாட்டி லிருந்து உபகரணங்கள் வாங்கியதில் அந்நியச் செலாவணி மோசடியில் ஈடுபட்டதாக வி.கே.சசிகலா மற்றும் அவரது உறவினர் பாஸ்கரன் மற்றும் ஜெஜெ தொலைக்காட்சி நிர்வாகம் மீது அமலாக்கத் துறையினர் 1996 ஆம் ஆண்டில் வழக்கு பதிவு செய்தனர். 


சென்னை எழும்பூர் முதலாவது பொருளாதாரக் குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள இந்த வழக்கில் சசிகலா, பாஸ்கரன் இரண்டு பேர் மீதும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.இந்த வழக்கில் பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவை மே 13ஆம் தேதி நேரில் ஆஜர் படுத்த சிறை நிர்வாகத்துக்கு எழும்பூர் முதலாவது பொரு ளாதார குற்றவியல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.


இந்த உத்தரவை ரத்து செய்து, காணொலிக் காட்சி மூலம் நீதிபதியின் கேள்விகளுக்குப் பதிலளிக்க அனு மதி கோரி சசிகலா தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசார ணை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நடைபெற்றது. அப்போது சசிகலா தரப்பில்,ஏற்கனவே இதே வழக்கில் உயர் நீதிமன்ற உத்தர வுப்படி, காணொலி காட்சி மூலம் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டதாகவும், மருத்துவக் காரணங் களுக்காக இம்முறையும் அதே வசதியை வழங்க வேண்டும் என்றும் வாதிடப் பட்டது.சசிகலா காணொலிக் காட்சி மூலம் ஆஜராவதற்கு எந்த ஆட்சேபமும் இல்லை. ஆனால், பதில்கள் பதிவு செய்யப்பட்ட ஆவணத்தில் அவரது கையெழுத்து பெற வேண்டியுள்ளது என அமலாக்கப் பிரிவு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார்.


இதையடுத்து, காணொளிக் காட்சி மூலம் ஆஜராகி, நீதிபதியின் கேள்விகளுக்குப் பதிலளிக்க அனுமதியளித்தும் பதில்கள் அடங்கிய கோப்பை, பெங்களூரு சிறைக்கு அனுப்பி, காணொலிக் காட்சியின்போது இருந்த அதிகாரி முன்னிலையில் அவரது கையெழுத்தைப் பெறவும் நீதிபதி உத்தரவிட்டார்.