சென்னை:
இந்திய ஒன்றிய அரசு விவசாயிகளுக்கு எதிராக கொண்டு வந்த மூன்றுவேளாண் சட்டங்கள் மற்றும் குடியுரிமைத் திருத்தச் சட்டங்களுக்கு எதிராக அடுத்த மாதம் நடக்கும் பட்ஜெட்கூட்டத்தொடரில் தீர்மானம் நிறை வேற்றப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது செவ்வாயன்று(ஜூன் 22) விவாதம் தொடங்கியது. திமுக உறுப்பினர் தமிழரசி பேசுகையில், “ஒன்றிய அரசு கொண்டு வந்திருக்கும் மூன்று சட்டங்களையும் திரும்பப் பெற வலியுறுத்தி தில்லியில் போராடி வரும்விசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து தீர்மானம் கொண்டு வந்து ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்” என்று முதலமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்தார்.இதற்கு விளக்கம் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,“ மூன்று வேளாண் சட்டங்கள் புதிதாக நிறைவேற்றப்பட்ட நாள் முதல், உழவர்நலனுக்கு எதிரான இந்தச் சட்டங்களை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும்என திமுக பல்வேறு தருணங்களில் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.அந்த வகையில், தமிழ்நாடு மட்டுமல்ல; இந்தியா முழுவதும் உள்ள உழவர் பெருமக்களின் உணர்வுகளை யும், விருப்பத்தையும் இந்த மன்றம் முழுமையாக பிரதிபலிக்கக்கூடிய வகையில், இந்த மூன்று சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்தி, இந்த அவையிலே ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்ற இந்த அரசு தெளிவாக முடிவு செய்திருக்கிறது. அதில் எந்த மாற்றமும் கிடையாது.
ஆனால், இந்த அவையின் முதல் கூட்டத் தொடர் என்ற முறையில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது, இத்தகைய தீர்மானங்களை முன்மொழிந்து நிறைவேற்றுவது உகந்ததாக இருக்காது. எனவேதான், வரவிருக்கக்கூடிய வரவு-செலவுத் திட்டக் கூட்டத் தொடரின்போது, அந்தஉரிய தீர்மானத்தைக் கொண்டுவந்து, நிச்சயமாக நிறைவேற்றி தமிழ்நாடுஅரசின் எதிர்ப்பை முழு மூச்சோடு பதிவுசெய்து, அவற்றைத் திரும்பப்பெற ஒன்றிய அரசை வலியுறுத்துவோம்” என்று உறுதியளித்தார்.
“ஒன்றிய அரசு கொண்டுவந்திருக் கக்கூடிய குடியுரிமை திருத்தச் சட்டமும் நாடு முழுவதும் உள்ள சிறுபான்மையினரின் நலனை வெகுவாக பாதித்து, அவர்களிடத்திலே ஒரு அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழ்நிலையில், அதையும் ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டுமென்று வலியுறுத்துவதற்கான தீர்மானத்தையும் வரவிருக்கக்கூடிய பட்ஜெட் கூட்டத் தொடரின்போது நிச்சயமாக நிறைவேற்று வோம்” என்றும் முதலமைச்சர் தெரி வித்தார்.