tamilnadu

ஐ.பி.எஸ் அதிகாரிகள் 16 பேருக்கு பதவி உயர்வு: 13 பேர் இடமாற்றம்

சென்னை, ஜூன் 26- 13 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளித்தும், 13 பேரை இடமாற்றம் செய்தும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சைபர் கிரைம் பிரிவுக்கு முதல் முறையாக கூடுதல் டிஜிபி நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணை யராக இருந்த மகேஷ் குமார் அகர்வால், காவல் செயல்பாடுகள் பிரிவு ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். நிர்வாகப் பிரிவு ஐஜி யான வெங்கடராமனுக்கு, சைபர் கிரைம்  பிரிவு, ஏடிஜிபியாக பதவி உயர்வு வழங்கப் பட்டுள்ளது. பெருகி வரும் இணைய குற்றங்  களைத் தடுப்பதற்காக இந்தப் பிரிவுக்கு  முதல் முறையாக ஏடிஜிபி நியமிக்கப் பட்டுள்ளார். நவீனமயமாக்கல் பிரிவு ஐஜி வினித் தேவ்  வாங்கடே, மாநில குற்ற ஆவணங்கள் காப்பக  பிரிவு ஏடிஜிபியாக பதவி உயர்வு பெற்றுள்  ளார். அந்தப் பிரிவின் டிஜிபியாக இருந்த  கரண் சின்கா, பயிற்சி பிரிவுக்கு மாற்றப் பட்டார். பயிற்சி பிரிவின் டிஜிபி குடவாலா, 30ஆம் தேதி ஓய்வு பெற உள்ளதால், அந்தப்  பிரிவுக்கு கரண் சின்கா மாற்றப் பட்டுள்ளார். சேலம் மாநகர காவல் ஆணை யரான சங்கர், சிபிசிஐடி ஐ.ஜியாக மாற்றப்  பட்டுள்ள நிலையில், புதிய ஆணையராக ஐ.ஜி. பதவி உயர்வுடன் செந்தில் குமார்  நியமிக்கப்பட்டுள்ளார். மத்தியக்குற்றப்பிரி வின் இணை ஆணையர் அன்பு, நிர்வாகப்  பிரிவு ஐஜியாக பதவி உயர்வு பெற்றுள்ளார். உளவுப் பிரிவு ஐஜி ஈஸ்வரமூர்த்தி மத்திய குற்றப்பிரிவின் கூடுதல் ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ரயில்வே போலீஸ் டிஐஜி பாலகிருஷ்ணன், திருச்சி சரக டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை தெற்கு போக்குவரத்து இணை  ஆணையர் சுதாகர் சென்னை கிழக்கு மண்டல  இணை ஆணையராக மாற்றப்பட்டுள் ளார். கிழக்கு மண்டல இணை ஆணையராக இருந்த ஜெய கவுரி சென்னை வடக்கு போக்கு வரத்து இணை ஆணையராக நியமனம் செய்  யப்பட்டுள்ளார். மத்திய உளவுப் பிரிவு துணை இயக்குநர் கண்ணனை மீண்டும் தமிழகத்திற்கு மாற்றியுள்ள அரசு, மாநில உளவுப்பிரிவு டிஐஜியாக நியமித்துள்ளது.