மாமல்லபுரம், ஏப்.15-பெண்களுக்கு பாதுகாப்பில்லாதஅதிமுக ஆட்சியை தூக்கி எரியவேண்டும் என மாமல்லபுரத்தில் நடைபெற் பிரச்சாரத்தில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் பேசினார்.மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் க.செல்வம், திருப்போரூர் சட்டமன்ற இடைத் தேர்தலில் போட்டியிடும் எல்.இதயவர்மன் ஆகியோருக்கு வாக்குசேகரித்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் திங்களன்று (ஏப் 15) திருப்போரூர் தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் இறுதிகட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதில், மாம்பாக்கத்தில் காலை 8 மணிக்கு பிரச்சாரத்தை தொடங்கிய ஸ்டாலின், நெல்லிக்குப்பம், மைலை கூட்ரோடு, திருப்போரூர், பையனூர் ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பின்னர், மாமல்லபுரம் பகுதிக்கு வந்த ஸ்டாலின் பேரூராட்சி அலுவலகம் எதிரே திறந்தவேனில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.திமுக தலைவர் முக.ஸ்டாலின் பேசியதாவது:-தமிழகத்தில் உள்ள அதிமுக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவதற்கான வாய்ப்பாக இடைத்தேர்தல்அமைந்துள்ளது. இதில், திமுகவெற்றி பெற்றால் பெண்களுக்கெதிரான சமூக விரோத செயல்களுக்கு முடிவு கட்டப்படும். மேலும், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம், 200க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பொள்ளாச்சி சம்பவம் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளதால், பெண்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடலை, கடற்கரையில் அடக்கம் செய்ய இடம்தர வேண்டும் என முதல்வர் பழனிசாமியின் கைகளை பற்றி கேட்டேன். ஆனால், இடம் அளிக்கப்படவில்லை. இதனால், சோகத்தோடு திமுக தலைவர் உடலின் அருகில் நின்றிருந்தேன். நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்றது. அப்போது, திமுக நிர்வாகிகள் இடம் கிடைக்காது நிலை உள்ளது. வேறு இடம் பார்ப்போம்எனக்கூறினர்.ஆனால், ‘அண்ணாவிடம் இதயத்தை இரவலாக தந்திடு, நான் அங்கு வரும்போது காலடியில் சமர்பிக்கிறேன்’ எனக்கூறியவர். இதற்காகவாது தலைவரின் உடலைகடற்கரையில் நாம் நல்லடக்கம் செய்ய வேண்டாமா எனக்கூறினேன். இறுதியில் நீதிமன்றத்தில் வெற்றி பெற்று தலைவரின் உடலை அடக்கம் செய்துள்ளோம். ஆனால், நீதிமன்றத்தில் வெற்றி இல்லை என்றாலும், தோளில் சுமந்து சென்று கலைஞரை கடற்கரையில் அடக்கம் செய்திருப்போம். கலைஞருக்கு இடம் அளிக்காத இந்த ஆட்சியை, ஆட்சி பீடத்தில் இருந்து அகற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.