கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 23 விமானங்களை சேவையில் இணைத்திருப்பதாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏர் இந்தியா, இன்டிகோ உள்ளிட்ட 8 உள்நாட்டு விமான நிறுவனங்களிடம் மொத்தம் 595 விமானங்கள் உள்ளன. தற்போது மூன்றவாது பெரிய விமான நிறுவனமாக உருவெடுத்துள்ள ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் போயிங் 737 ரக விமானத்தை புதிதாக வாங்கி இருக்கிறது. இதன் மூலம் மொத்த விமானங்களின் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்திருக்கிறது.
ஜெட் ஏர்வேஸ் மூடப்பட்ட பின் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 23 விமானங்களை சேவையில் இணைத்திருப்பதாக ஸ்பைஸ்ஜெட் தெரிவித்துள்ளது. இதை அடுத்து தினமும் 62 இடங்களுக்கு 575 ஸ்பைஸ் ஜெட் விமானங்கள் இயக்கப்படுகின்றன. குறைந்த கட்டண சேவைக்காக தொடங்கப்பட்ட மத்திய அரசின் உடான் திட்டத்திலும் இந்த நிறுவனம் முக்கிய பங்கு வகிக்கிறது.