சென்னை,நவ.15- மழையின் காரணமாக வெங்காயத்தின் விளைச்சல் பாதிக்கப் பட்டதால் நாடு முழு வதும் அதன் விலை அதிகரித்து காணப் பட்டது. இதன் காரணமாக தமிழகத்திற்கு தேவையான வெங்காயம் வெளிமாநிலங்க ளிலிருந்து கொள்முதல் செய்யப்பட்டதால், ரூ. 80 வரை விற்பனையான ஒரு கிலோ வெங்காயம் கடந்த வாரம் 60 ரூபாயாக குறைந்தது. இந்நிலையில் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிற்கு வரும் வெங்காயத்தின் வரத்து மீண்டும் குறைந்துள்ளதால் அதன் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. கடந்த வாரம் ரூ. 60 வரை விற்கப்பட்ட ஒரு கிலோ பெரிய வெங்காயம் 80 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் 100 ரூபாய்க்கும் விற்பனையானது.