மும்பை:
மும்பை பங்குச் சந் தையில் திங்களன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் குறியீடு 405.67 புள்ளிகள் சரிவடைந்து 39,107.72 புள்ளிகளாக காணப்பட்டது. இதேபோன்று தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு 128 புள்ளிகள் சரிவடைந்து 11,683.15 புள்ளிகளாக இருந்தது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் 15 பைசாக்கள் குறைந்து 68 ரூபாய் 57 காசுகளாக இருந்தது.