tamilnadu

img

கடனில் சிக்கி தவிக்கும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் மற்றுமொரு 15 விமானங்களின் சேவை நிறுத்தம்

கடனில் மூழ்கியுள்ள ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் மற்றுமொரு 15 விமானங்களின் சேவையை அந்நிறுவனத்திற்கு புதிதாக தலைமையேற்றுள்ள அமைப்பு முடக்கப்பட்டுள்ளது.


மும்பையை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டுவரும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கடனிலிருந்து மீள வாடகைக்கு விமானங்களை எடுத்து இயக்கி வந்தது. இருந்தும் தனது தவணை பாக்கிகளை செலுத்த முடியாமல் தொடர்ந்து தனது சேவையில் உள்ள விமானங்களின் எண்ணிக்கையை குறைத்து வந்தது. இந்நிறுவனம் தற்போதுவரை 54 விமானங்களை தனது சேவையில் இருந்து நிறுத்தியுள்ளது. தற்போது ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் மொத்தம் 20 விமானங்களை மட்டும் இயக்கத்தில் வைத்துள்ளது.


மேலும், கடந்த மார்ச் 25ம் தேதி பாரத ஸ்டேட் வங்கியின் தலைமையிலான உள்நாட்டு கடனளித்தவர்கள் குழு அளித்த நிபந்தனைக்கு ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் ஒப்புதல் அளித்திருந்தது. அதன்படி,அந்நிறுவனத்தின் முழு கட்டுப்பாட்டையும் கடன் வழங்கியவர்களின் குழு தனதாக்கியுள்ளது. தற்போது இந்த குழுவின் முடிவினால் 15 விமானங்களின் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக இயக்கத்திலிருந்து நீக்கப்பட்ட விமானங்களின் எண்ணீக்கை 69ஆக மாறியுள்ளது.