கோவிட்-19 பரவல் காரணமாக, சர்வதேச விமான சேவை ரத்தானது, ஜூலை 15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கோவிட்-19 பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டன. இதை அடுத்து, கடந்த மே 25-ஆம் தேதி முதல் உள்நாட்டு விமான சேவைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டன. இந்த நிலையில், தற்போது சர்வதேச விமான சேவை ரத்தானது, ஜூலை 15-ஆம் தேதி வரை நீடிக்கும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. எனினும், சரக்கு விமான போக்குவரத்திற்கும், சிறப்பு விமான போக்குவரத்திற்கும் எந்த தடையும் விதிக்கவில்லை என்று தெரிவக்கப்பட்டுள்ளது.