tamilnadu

img

பசி நெருப்போடு விளையாடாதீர்!

நாகை மாவட்டம் உட்படத்தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று நோய்க் காரணமாக, 6-ஆம் கட்ட ஊரடங்கு நிலவி வருகிறது. இதனைத் தொடர்ந்து, பாதிக்கப் பட்டுள்ள பொதுமக்களுக்கு- குடும்பஅட்டைதாரர்களுக்குத் தமிழக அரசின் உத்தரவுப்படி, 2020- ஏப்ரல், மே, ஜூன் ஆகிய 3 மாதங்களுக்கு, வழக்கமாக வழங்கும் இலவச (தரமற்ற) அரிசியுடன், அத்தியாவசியப் பொருள்கள் இலவசமாக ரேசன் கடைகளில் வழங்கப்பட்டன. மேலும், மே, ஜூன் மாதங்களில் மத்திய அரசின் தொகுப்பிலிருந்து குடும்ப அட்டையில் உள்ள ஓவ்வொருநபருக்கும் இலவசமாக 5 கிலோ அரிசியும் வழங்கப்பட்டது. எடுத்துக்காட் டாக- ஒரு ரேசன் அட்டையில் 5 நபர்கள்இருந்தால், 5x5= 25 கிலோ அரிசி கூடுதலாக இலவசமாக வழங்கியிருக்க வேண்டும். ஆனால், பல பேருக்கு விவரம் தெரியாததால், மத்திய அரசின் இலவச அரிசி பரவலாகப் பலருக்கு வழங்கப்படாமல், ரேசன் கடைகளில், பொது விநியோக நிர்வாகத்தில் மகா ஊழல் நடந்துள்ளது. இதுபற்றித் தமிழக அரசுவிசாரணை மேற்கொள்ள வேண்டும்.

தொடர்ந்து, மத்திய அரசின் தொகுப்பிலிருந்து, ஜூலை மாதம் முதல் நவம்பர் மாதம் வரை ரேசன் அட்டையில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் கூடுதலாக 5 கிலோ அரிசிவழங்கப்படும் என அரசு அறிவித்துள் ளது. அத்துடன் வழக்கம் போல தமிழகஅரசின் சார்பில் இலவசமாக வழங்கப்படும் அரிசி வழக்கம்போல் வழங்கப் படும். இதில் ரேசன் பொருள்கள் பெறுவோர் கவனமாக இருங்கள்.மேலும், தமிழக அரசு, ரேசன் கடைகளில் வழங்கும் மிக மட்டமான அரிசிபோல் இல்லாமல், மத்திய அரசின் தொகுப்பிலிருந்து வழங்கப்படும் அரிசியாவது நல்ல அரிசியாக இருக்கும் என்று நம்பிய மக்களுக்கு அதே வழக்கமான மோசமான அரிசியை வழங்கியது பெருத்த ஏமாற்றத்தையே அளித்தது. இனிமேலாவது அரசு கொஞ்சமாவது நல்ல அரிசியை மக்களுக்கு வழங்கவேண்டும். தற்போது, ஜூலை மாதத்திற்கு, வழக்கமாக வழங்கப்படும் இலவச அரிசியுடன், அத்தியாவசியப் பொருள் களும் இலவசமாக வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த விவரம் அறியாத பலர், ஜூலை
மாதம், 3 தேதி வரை, அத்தியாவசியப் பொருள்களைப் பணம் கொடுத்து வாங்கியுள்ளனர். இப்படிப் பணம் கொடுத்துப் பொருள்கள் வாங்கிய மக்களுக்கு அடுத்த மாதம் (ஆகஸ்ட்) பணம் திருப்பியளிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இதிலும் மக் கள் கவனமாக இருக்க வேண்டும்.

ஏதோ, ஒரு 1000- ரூபாய் வழங்கிவிட்டோம், பேருக்கு இலவச அரிசியைப் போடுகிறோம் என்று, மத்திய-மாநில அரசுகள் சும்மா இருந்து விடக் கூடாது. மக்கள்படும் அவதிகளைக் கொஞ்சம் கண்ணெடுத்துப் பார்க்க வேண்டும். ஏழை எளிய மக்கள் பிச்சை எடுக் கும் நிலைக்கு வந்து விட்டார்கள்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும்,வெகுஜன இயக்கங்களும் தொழிற் சங்க அமைப்புகளும் மற்ற இடதுசாரிக் கட்சிகளும் அல்லற்படும் மக்களுக்கு, தொழிலாளர்களுக்கு நிவாரணம் அளிக்க வேண்டும் என்று அன்றாடம் போராட்டம் நடத்திக் கொண்டிருக் கின்றன. உயிருக்கும் வயிற்றுப் பசிக்கும் போராடும் மக்களுக்கு இந்த நெருக்கடியான நேரத்தில் மத்திய- மாநில ஆட்சியினர் உதவா விட்டால், வேறு எப்போது உதவப் போகிறீர்கள்? வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மக்களின்வயிற்றுப் பசி நெருப்போடு விளையாடாதீர்கள்! கொரோனா ஊரடங்கின் காரணமாக அல்லற்படும் இந்த நெருக்கடியான காலத்திலும், ஆட்சியாளர்களே, பொது வினியோக நிர்வாகத்தினரே, மக்களை வஞ்சிக்காதீர்! மக்களே கவனமாக இருங்கள்!\

ந.காவியன்