tamilnadu

img

அதானி நிலக்கரி சுரங்கத்திற்காக அழிக்கப்படும் பழங்குடி மக்கள்?... ஒடிசா அரசுக்கு எதிராக 7 கிராம மக்கள் போராட்டம்!

புவனேஸ்வர்:
ஒடிசா மாநிலம் சம்பல்பூர் மாவட் டத்தில் உள்ள கோண்ட் மற்றும் முண்டாபாதாவில் சுமார் 4 ஆயிரம் ஏக்கரில் அடர்ந்த வனப்பகுதி உள்ளது. 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் உள்ளன. இந்நிலையில், அதானி குழுமம் மூலம் இந்தப் பகுதியில் நிலக்கரி சுரங்கம் அமைக்க நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜூ ஜனதாதளம் அரசு முடிவெடுத்துள்ளது. இதற்காக வனத்தில் உள்ள 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்களை வெட்டி வீழ்த்துவதுடன், காடுகளை வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கும் பழங்குடி மக்களை வெளியேற்றவும், முயற்சிகளில் இறங்கியுள் ளது. இதற்கு தற்போது எதிர்ப்பு எழுந்துள்ளது.“நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்காக எங்களை இங்கிருந்து கடத்துகிறார்கள். 7 கிராமங்களில் 10 ஆயிரத்திற்கும் அதிகமாக நாங்கள் வசிக்கிறோம்.

இந்நிலையில், சுரங்கம் அமைக்கப்பட்டால் நாங்கள் பெரிதும் பாதிக் கப்படுவோம்” என்று பழங்குடி மக் கள் கூறுகின்றனர்.“இயற்கையை அழித்துத் தான் அரசு லாபம் சம்பாதிக்கவேண்டுமா?” என்று கேள்வி எழுப்பும் அவர்கள், “2012-ஆம் ஆண்டு முதலே வனத்தைப்பாதுகாக்க பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளோம்; ஆனால் இந்தமுறை நாங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தியும் கூட, அவர்கள் சுரங்கம்அமைக்கும் பணியை நிறுத்துவதாக இல்லை; கடந்த மூன்று தலைமுறையாக பாதுகாத்து வந்த காடுகளை அரசே அழிக்கிறது” என்று கவலை தெரிவிக்கின்றனர்.மேலும், “சுரங்கம் அமைக்கக் கூடாது என கிராமசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில்,மாவட்ட அதிகாரிகளோ, நிலக்கரிச் சுரங்கம் அமைப்பதற்கு ஆதரவாக போலியாக தீர்மானத்தை தயார் செய்துள்ளனர்” என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.