tamilnadu

img

ஊழல் குற்றச்சாட்டை நிரூபித்தால் ராஜினாமா

ஆளுநருக்கு புதுவை முதல்வர் சவால்

புதுச்சேரி, ஜன. 16- தன் மீதான புகாரை ஆளுநர் வெளியிட்டது  அழகல்ல என்றும், ஊழல் குற்றச்சாட்டை நிரூபித்தால் ராஜினாமா செய்ய தயாராக இருப்பதாகவும் புதுவை முதலமைச்சர் நாரா யணசாமி சவால் விட்டுள்ளார். புதுவை முதலமைச்சர் நாராயண சாமி செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது,“தில்லியில் பிரதமர், நிதி, உள் துறை, தேசிய நெடுஞ்சாலைத்துறைகளின் அமைச்சர்களை சந்தித்து மாநிலத்துக்கு தேவையான திட்டங்களுக்கு நிதி அளிக்கும் படி கேட்டுக் கொண்டேன். மத்திய அரசு தர  வேண்டிய நிலுவைத்தொகை அளிக்கவும், மாநில அந்தஸ்து வழங்கவும் வலியுறுத்தி னேன்” என்றார்.

தனவேலு எம்.எல்.ஏ. என் மீது மட்டுமின்றி,  மாநில காங்கிரஸ் ஆட்சி, அமைச்சர்கள் மீதும்  புகார் கூறியுள்ளார். இந்த புகார்கள் தொடர்  பாக ஆளுநரை சந்தித்து மனு அளித்துள் ளார். நானும், எனது மகனும் நில அபக ரிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும் புகார் அளித்த தாக ஆளுநர் மாளிகை செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது. இது, ஆளுநருக்கு அழகல்ல என்றும் அவர் கூறினார். யார் ஒருவர் புகார் அளித்தாலும் அதை  எழுத்துப்பூர்வமாக பெற வேண்டும். அந்த புகாரில் முகாந்திரம் உள்ளதா? என ஆராய  வேண்டும். அதன்பிறகு புகாரை பற்றி கூற வேண்டும். இவை எதுவும் இல்லாமல் வாய்  மொழியாக வந்த புகாரை பத்திரிகை செய்தி யாக கொடுத்துள்ள கிரண்பேடி ஆளுந ருக்கு தகுதியற்றவர், நிர்வாகம் தெரியாத வர் என்பதையே காட்டுகிறது என்றும்  அவர்  தெரிவித்தார். நானோ, எனது மகனோ, குடும்பத்தி னரோ நில அபகரிப்பில் ஈடுபட்டதை ஆதா ரத்துடன் நிரூபித்தால் எனது முதலமைச்சர் பதவியை விட்டு விலக தயாராக உள்ளேன். இதேபோல என் மீது புகார் கூறியவரும், அந்த புகாரை பத்திரிகைக்கு அளித்த ஆளுந ரும் ஆதாரத்தை நிரூபிக்காவிட்டால் அவர் கள் பொது வாழ்விலிருந்து வெளியேற தயாரா? என்றும் நாராயணசாமி கேள்வி எழுப்பினார்.

என் மீது கடந்த 3 ஆண்டாக ஏதாவது ஒரு  புகாரை கண்டுபிடிக்க வேண்டும் என தேடிக்  கொண்டிருக்கிறார் ஆளுநர் கிரண்பேடி. தன வேலுக்கு பின்னால் என்.ஆர்.காங்கிரசும், பாஜகவும் உள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டினார். முதலமைச்சர், அமைச்சர்களை அசிங்கப்  படுத்துவது, அதிகாரிகளை மிரட்டுவது போன்ற தரம் தாழ்ந்த செயல்களில் மட்டுமே  ஆளுநர் ஈடுபட்டு வருகிறார். தனவேலு  எம்.எல்.ஏ. மீது மானநஷ்ட வழக்கு தொடர்  வது குறித்து சட்ட வல்லுனர்களுடன் ஆலோ சனை நடத்தி வருவதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.