tamilnadu

img

ஜனவரி 9 முதல் பொங்கல் பரிசு

சென்னை,டிச.31- ஜனவரி 9 ஆம் தேதி முதல் 12ஆம் தேதிக்குள் பொங்கல் பரிசு  தொகுப்பு வழங்கும் பணிகள் நிறைவடைய வேண்டும் எனத் தமிழக அரசு  உத்தரவிட்டுள்ளது. பச்சரிசி, கரும்பு, சர்க்கரை, முந்திரி, உலர் திராட்சை, ஏலக்காய் மற்றும்  ஆயிரம் ரூபாய் ஆகியவற்றுடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் தலைமைச்  செயலகத்தில் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முழுவதும் 2 கோடி குடும்ப அட்டை தாரர்களுக்குத் தேவை யான பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் கொள்முதல் செய்யப் பட்டு வழங்குவதற்கான பணிகள் தீவிரமடைந்துள்ளன. ஜனவரி 9 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதிக்குள் பொங்கல் பரிசு  தொகுப்பு வழங்க வேண்டும் என்றும், பரிசு தொகுப்பையும், 1000  ரொக்கத் தொகையும், ஒரே நேரத்தில் மக்களுக்கு வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவுறுத்தியிருக்கிறது.