முறைகேட்டுக்கு மூல ஊற்றாக இருக்கும் இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் இ-பாஸ் முறை இப்போதைக்கு ரத்து செய்யப்படமாட்டாது என்று முதல்வர் கூறி யுள்ளார்.
இ-பாஸ் வழங்க லஞ்சம் பெறும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அர சுக்கு அறிவுறுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்ட த்தில் தனியார் நூற்பாலை ஒன்றில் சட்டவிரோத மாக பணியமர்த்தப்பட்ட 8 முதல் 12ஆம் வகுப்பு மாணவிகளை மீட்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் இ-பாஸ் பெறாமல் திருவண்ணாமலையைச் சேர்ந்த மாணவிகள் திருப்பூர் மாவட்டத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டது நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
தரகர்கள் மூலம் ரூ.500 முதல் ரூ.2000ஆயிரம் வரை லஞ்சம் பெற்றுக்கொண்டு இ-பாஸ்கள் வழங்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர் பாக கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள் கொரோனா காலத்திலும் ரத்ததாகம் கொண்ட ஓநாய்கள் போல சில அதிகாரிகள் செயல்படுவ தாக குற்றம்சாட்டினர். அவர்கள் மீது கடுமை யான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலி யுறுத்தினர்.
எனினும் இ-பாஸ் முறையை ரத்து செய்ய தமிழக அரசு மறுத்து வருகிறது. முறைகேடு தடுக்கப்படும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டா லும் இந்த முறையே முறைகேட்டிற்கு வழி வகுக்கிறது என்று ஒப்புக்கொள்ள அரசு மறுக் கிறது. ஆட்டோ தொழிலாளர்கள், வேன் உரிமை யாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் இ-பாஸ் முறை யை ரத்து செய்ய வேண்டும் என தொடர்ந்து வலி யுறுத்துகின்றனர். அத்தியாவசியத் தேவை களுக்கு இ-பாஸ் கிடைப்பதில்லை என பொதுமக்களும், வணிகர்களும் தொடர்ந்து குற்றம்சாட்டுகின்றனர். ஆனால் முறைகேடுகள் மூலம் இ-பாஸ் தொடர்ந்து விற்பனை செய்யப் படுகிறது. இதைத்தடுக்க மாநில அரசினால் முடியவில்லை என்பதே உண்மை.
கொரோனா தொற்று காரணமாக விதிக்கப் பட்ட பல விதிகள் கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்த ப்படும் நிலையில் பொதுப் போக்குவரத்தை மீண்டும் கட்டுப்பாடுகளுடன் துவங்குவது தொடர் பாக மாநில அரசு முடிவெடுக்க வேண்டிய தருண மாக இது உள்ளது. பொதுப் போக்குவரத்து இல்லாததால் அன்றாடம் உழைத்துப் பிழைக்கும் கூலித் தொழிலாளர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். தனிமனித இடைவெளி, மாஸ்க் அணிதல், பேருந்துகளில் குறிப்பிட்ட எண்ணிக்கையில்தான் பயணிகளை அனு மதிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகளுடன் பொதுப் போக்குவரத்தை குறிப்பாக பேருந்துப் போக்குவரத்தை தொடங்க வேண்டும். அரசு அறிவித்துள்ள பல்வேறு தளர்வுகள் நடைமுறைக்கு வரவேண்டுமானால் பொது போக்குவரத்து துவங்குவது, இ-பாஸ் முறையை ரத்து செய்வது போன்ற நடவடிக்கைகள் அவசியமாகும். இதுகுறித்து மாநில அரசு ஆலோசித்து நடவடிக்கை எடுப்பதன் மூலமே கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு வாழ்க்கையை திரும்பச் செய்ய முடியும்.