கோயம்புத்தூர், ஜூலை 21- உயர்மின் கோபுரம் அமைக்க சுற்றுச் சூழல் அனுமதி தேவையில்லை என்கிற மத்திய அரசின் முடிவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோவை நாடாளு மன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கடும் கண்ட னத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உயர் மின்னழுத்த கோபுரம் அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை என மத்திய அரசு கூறி யிருப்பது கண்டனத்திற்குரியது. விவசாயிகளை அனைத்து வகையிலும் மத்திய பாஜக மோடி அரசு நசுக்க பார்க்கிறது. மத்திய அரசின் இந்த அறிவிப்பு தமிழக விவசாயிகளை கொதிப்படையச் செய்துள்ளது. ஜூலை 22, 23 ஆம் தேதிகளில் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தில்லி ஜந்தர்மந்தரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடைபெறு கிறது.
உயர் மின்னழுத்த கோபுரம் அமைக்க சுற்றுச் சூழல் அனுமதி தேவை என்கிற விதியை மாற்றக் கூடாது. பழைய மின்னழுத்த கோபுரங்களுக்கு வாடகை தீர்மானிக்க வேண்டும். மின்சாரத்தை புதைவடமாகக் கொண்டு செல்ல வேண்டும் என்பதே எங்களது நிலைப்பாடு. மின்சாரம் கொண்டு செல்லும் முறை நவீனப்படுத்த வேண்டும். மத்திய அரசின் இந்தச் செயல் தமிழக விவசாயி களை வஞ்சிப்பதற்கு சமம். அனைத்து வகையிலும் விவசாயிகளை நசுக்கும் மத்திய அரசின் முடிவை வன்மையாகக் கண்டிக்கிறேன். தமிழக எம்.பி.க்களு டன் கலந்து பேசி அடுத்த கட்ட முடிவு எடுக்கப்படும். தில்லியில் துறை சார்ந்த மத்திய அமைச்சர்களைச் சந்தித்து, இம்முடிவை திரும்ப பெற வேண்டுமென வலியுறுத்துவோம் என்று அறிக்கையில் கூறியுள்ளார்.