ஈரோடு,நவ.9- ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதா ரமான பவானிசாகர் அணை 12 ஆண்டு களுக்கு பிறகு, முழுக்கொள்ளளவான 105 அடியை எட்டியுள்ளது. ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் அருகே உள்ளது பவானிசாகர் அணை. கோயம்புத்தூர் மாவட்டத்தின் மேட்டுப்பா ளையம், சிறுமுகை வழியாக வரும் பவானி ஆற்றுடன் நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தியாகும் மோயாறு கலக்கும் இடத்தின் கீழ் பவானிசாகர் அணை கட்டப் பட்டுள்ளது. தமிழகத்தின் இரண்டாவது பெரிய அணை என்னும் சிறப்புக்குரிய பவானி சாகர் அணை, ஆசியாவிலேயே மிக நீளமான மண் அணை ஆகும். அண்மைக்காலமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வந்த கனமழை யால் நீர் வரத்து அதிகரித்து வந்தது. இதனால் பவானிசாகர் அணை 12 ஆண்டு களுக்கு பிறகு, முழு கொள்ளளவான 105 அடியை எட்டியுள்ளது. அணைக்கு தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்துள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.