இந்தியப் பொருளாதார மந்தநிலையால் தொடர் சரிவை சந்தித்து வரும் வாகன விற்பனை செப்டம்பர் மாதமும் சரிந்துள்ளது.
மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையால் நாடே பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. அதில் பெரிதும் பாதிக்கப்பட்டு காணப்படும் ஆட்டோமொபைல் துறையில் வாகனங்களின் விற்பனை பெரிதும் சரிந்துள்ளது. இதனால் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தொடர்ந்து வேலையில்லா நாட்களை அறிவித்தும், வேலையாட்கள் குறைப்பிலும் ஈடுபட்டு வருகின்றது. இந்நிலையில் வாகன விற்பனையை கூட்டுவதற்காக மத்திய அரசு பல சலுகைகளை வழங்கியுள்ளது.
இதனை தொடர்ந்து இச்சலுகையினால் எந்த முன்னேற்றமும் காணப்படாத நிலையில் செப்டம்பர் மாதமும் வாகன விற்பனை வெகுவாக குறைந்துள்ளது. அது இரு சக்கர வாகனங்கள் தொடங்கி, கனரக வாகனங்கள் வரை விற்பனை சரிந்து காணப்படுகிறது. கடந்த செப்டம்பர் மாதத்தில் மாருதி நிறுவனத்தின் விற்பனை 24.81 சதவீதமும், ஹூண்டாய் நிறுவனத்தில் 14.81 சதவீதமும், மணந்திர நிறுவனத்தில் 33.06 சதவீதமும், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் 56.06 சதவீதமும் சரிவை சந்தித்துள்ளது.
இதேபோன்று இருசக்கர வாகனங்களும், வணிக வாகனங்களான அசோக் லேலாண்ட் போன்றவற்றிலும் வாகன விற்பனையானது சரிவை சந்தித்து வருகிறது.