பெங்களூரு:
கர்நாடகாவில் சூரிய கிரகணத்தன்று மாற்றுத்திறனாளி குழந்தைகளை கழுத்துவரை மண்ணில் புதைத்து வைத்த பெற்றோர்களின் மூடநம்பிக்கை செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.டிசம்பர் 26 அன்று அரிய வானியல் நிகழ்வான வளைய சூரிய கிரகணம் தெரிந்தது. இந்நிலையில் கர்நாடக மாநிலம் கலா புராகி பகுதியில் சிலர் மாற்றுத் திறனாளி குழந்தைகளை கழுத்து வரை மண்ணில் புதைத்து வைத்த காட்சிகள் வெளியாகி, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.சூரிய கிரகணத்தின் போது இவ்வாறு புதைத்து வைத்தால், மாற்றுத்திறனாளி குழந்தைகளின் குறைபாடு சரியாகிவிடும் என்ற மூடநம்பிக்கையின் காரணமாக குழந்தைகளை புதைத்து வைத்தது தெரிய வந்துள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.