அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 7ஆவது வார்டு மாவட்டக் கவுன்சில் பதவிக்கு போட்டியிடும் அகிலாவின் சின்னம் அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திலும், காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் நடராஜ னுக்கு கை சின்னத்திலும் வாக்கு சேகரிப்பு பிரச்சாரம் ஜெயங்கொண்டத்தை அடுத்த குருவேலப்பர் கோவிலில் பிரச்சாரம் தொடங்கி பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக் குழு உறுப்பினர் எம்.சின்னதுரை, மாவட்டச் செயலாளர் ஆர்.மணிவேல், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.மகாராஜன், ஒன்றிய குழு உறுப்பினர் சி.உத்திராபதி, ஒன்றிய செயலாளர் எம்.வெங்கடாஜலம், திமுக ஒன்றிய செயலாளர் மணிமாறன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் பிரச்சார பொறுப்பா ளர் இலக்கியதாசன் மற்றும் காங்கிரஸ் கட்சி சார்பில் பலர் கலந்து கொண்டனர்.