tamilnadu

img

கீழடியில் வெகுவிரைவில் அருங்காட்சியகம் அமைத்திடுக!

கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

கீழடி, அக்.12- கீழடியில் நடைபெற்றுவரும் அகழ் வாய்வுப் பணிகள், அங்கு கண்டறியப் பட்டுள்ள பொருட்கள் பிரமிப்பூட்டுவதாக உள்ளதாகவும் அங்கு உடனடியாக அருங் காட்சியகம் அமைக்க வேண்டுமென்றும்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார். சனிக்கிழமையன்று மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் இரா.விஜயராஜன், வாலிபர் சங்க மாநிலச் செயலாளர் எஸ். பாலா, மாதர் சங்க மாவட்டச் செயலாளர் ஆர். சசிகலா ஆகியோருடன் கீழடி அகழ்வாய்வுப் பணிகளை சுமார் இரண்டு மணி நேரம் கே. பாலகிருஷ்ணன் சுற்றிப் பார்த்தார். அவ ருக்கு தொல்லியல்துறையினர், ஆய்வு மாண வர்கள், சு.வெங்கடேசன் ஆகியோர் அக ழாய்வுகள் குறித்து விளக்கினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் கே.பால கிருஷ்ணன் கூறியதாவது: கீழடி அக ழாய்வுப் பணிகளும், அதில் கண்டறியப்பட் டுள்ள பொருட்களும் பிரமிப்பூட்டுவதாய் அமைந்துள்ளது. தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றை எடுத்துக்காட்டு கிறது. 2,600 ஆண்டுகளுக்கு முந்தைய தமி ழர்களின் நாகரீகத்தை உணர்த்துகிறது. சிந்துச்சமவெளி நாகரீகத்தோடு கீழடி வைகைக் கரை நாகரீகம் ஒத்துப்போகிறது. 2,600 ஆண்டுகளுக்கு முன்பு விவசாயம் மட்டுமல்ல தொழிலிலும் தமிழர்கள் சிறந்து விளங்கினார்கள் என்பதை இதன் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. 

இந்த ஆய்வு இன்னும் பல ஆண்டு களுக்குத் தொடர வேண்டும். அகழ்வாய் விற்கு தேவைப்படும் நிலங்களை அரசு கை யகப்படுத்த வேண்டும். அதற்கான உரிய நிவா ரணத்தை மத்திய-மாநில அரசுகள் வழங்க வேண்டும். நிலம் வழங்கிய விவசாயிகள், இங்கு பணியாற்றிய தொழிலாளர்களை தமி ழக அரசு பாராட்டி கௌரவிக்க வேண்டும். தமிழக தொல்லியல்துறை, ஆராய்ச்சி மாண வர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவினர் அர்ப்ப ணிப்பு உணர்வோடு இந்தப் பணியில் ஈடு பட்டுள்ளனர். அவர்களை மார்க்சிஸ்ட்  கம்யூ னிஸ்ட் கட்சி மனதாரப்பாராட்டுகிறது. வெகு விரைவில்  தமிழக அரசு அருங்காட்சியகம் அமைக்க வேண்டுமென்றார். கீழடியை பார்வையிடுவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டுமென பார்வையிட்டுச் செல்லும் மக்கள் கோரிக்கை எழுப்புகின்றனரே என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த கே.பால கிருஷ்ணன், ஐந்தாம் கட்ட அகழ்வாய்வுப் பணிகள் நிறைவு பெறுகிறது என அறி வித்துள்ளது சரிதான். அதே நேரத்தில் அக ழாய்வுப் பணிக்காக தோண்டப்பட்ட குழி களையும், கண்டறியப்பட்ட பொருட்களை யும் மக்கள் பார்த்துச் செல்வதற்கு தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டுமென்றார்.