அலிகார்:
தேச ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறார் என்று இந்து மகா சபை அளித்த புகாரின் பேரில், காஷ்மீர் பேராசிரியர் ஒருவர் மீது உத்தரப்பிரதேச பாஜக அரசு வழக்கு பதிவுசெய்துள்ளது.ஜம்மு - காஷ்மீரைச் சேர்ந்தவர் பேராசிரியர் ஹூமா பர்வீன். உத்தரப்பிரதேச மாநிலத்திலுள்ள அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் மக்கள் தகவல் தொடர்புத்துறையில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்.இந்நிலையில், காஷ்மீரில் தகவல் தொடர்பு வசதி துண்டிக்க பட்டதையொட்டி, ஹூமா பர்வீன் சமூகவலைத்தளத்தில் கருத்துப் பதிவு ஒன்றை வெளியிட்டதாக கூறப்படுகிறது. “தொடர்பு இழந்தால் வலிதான்; அது சந்திர யானாக இருந்தாலும் சரி, காஷ்மீராக இருந்தாலும் சரி..!”என்பதாக அந்த பதிவு இருந்துள் ளது. இதேபோல வேறு சிலபதிவுகளையும் அவர் வெளியிட்டதாக கூறப்படுகிறது.இதையடுத்து, பேராசிரியர் ஹூமா பர்வீனின் பதிவுகள், பாதுகாப்புப் படையினரின் மன உறுதியை புண்படுத்துவதாகவும்; தேசஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத் தலை ஏற்படுத்துவதாகவும் இந்துமகா சபையைச் சேர்ந்த சோக் பாண்டே என்பவர் புகார் அளித் துள்ளார்.
அதனை ஏற்றுக்கொண்டு, உத்தரப்பிரதேச பாஜக அரசும்,பேராசிரியர் ஹூமா பர்வீன்மீது காந்தி பார்க் காவல்நிலை யத்தில், வழக்கு பதிவு செய்துள்ளது.இதனிடையே தான் இடுகை எதையும் பதிவிடவில்லை; செய்தித்தாள்கள், இணையதளங்கள் மற்றும் நண்பர்களின் பக்கங்களில் வந்த இடுகைகளைப் பகிர மட்டுமே செய்தேன் என்று பேராசிரியர் ஹூமா பர்வீன் தெரிவித்துள்ளார்.