tamilnadu

img

நியூயார்க்கில் ஈரானுக்கு ஆதரவாக மக்கள் போராட்டம்

ஈரான் மீது போர் வேண்டாம் என நூற்றுக்கணக்கான நியூயார்க் மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானியை அமெரிக்கா கடந்த 3-ஆம் தேதி ஏவுகணை தாக்குதல் மூலம் கொலை செய்தது. இதற்கு பதிலடியாக ஈராக்கில் எர்பில் மற்றும் அல்-ஆசாத் ஆகிய இடங்களில் உள்ள அமெரிக்காவின் ராணுவ தளங்கள் மீது ஈரான்  ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதனால், இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது.  

இந்நிலையில், ஈரான் மீது பொருளாதார தடை மற்றும்  போர் வேண்டாம் என அமெரிக்காவின் நியூயார்க் நகரில், நூற்றுக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, "ஈரான் மீது  பொருளாதார தடை மற்றும் போர் வேண்டாம், நாங்கள் அமைதியை விரும்புகிறோம்" என்ற பதாகைகள் ஏந்தியவாறு கோஷங்கள் எழுப்பினர். மேலும், ஈராக் - அமெரிக்கா இடையேயான பதற்றமான சூழ்நிலைகள் தணிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி அமெரிக்கா முழுவதும் 360  இடங்களில் பேரணி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.